கோபியை பொண்டாட்டியாக மாற சொல்லி ட்விஸ்ட் வைத்த ராதிகா.! இது உனக்கு தேவைதானா கோபி..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்போது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது 50 வயதுக்கு மேல் ஆகியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி படாத பாடுபடும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

மேலும் கோபி சாப்பிடுவதற்கு கூட சாப்பாடு இல்லாமல் அல்லல்பட்டு வருகிறார். அதாவது பாக்கியா எப்பொழுதும் காலையில் எழுந்த காபி முதல் தூங்கும் வரை அனைத்து வகையான உணவுகளையும் சமைத்துக் கொடுப்பது கோபிக்கு பணிவிடை செய்வது போன்ற பலவற்றையும் செய்து வந்தார். அப்பொழுது கோபிக்கு அந்த அருமை புரியவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராதிகா உப்மா, நூடுல்ஸ் என இது போன்ற உணவுகளை சமைத்துக் கொடுக்கிறார்.

எனவே இந்த உணவுகள் சுத்தமாக கோபிக்க பிடிக்கவில்லை இதனால் வேறு எதுவும் சமைக்க மாட்டியா என ராதிகாவிடம் கோபி கேட்கிறார். பிறகு காலையில டிபன் மதியம் ஆனால் சாப்பாடு நைட் டிபன் என மூன்று வேலையும் என்னால் சமையல் அறையிலேயே இருக்க முடியாது என ராதிகா கூறிவிடுகிறார். வென நீங்க சமைக்கிறீர்களா என கோபியிடம் ராதிகா கேட்க இவ எனக்கு பொண்டாட்டியா இல்ல நான் இவளுக்கு பொண்டாட்டியா என்று யோசிக்கிறார்.

சமையல் கட்டு பக்கமே நான் போனதில்லை எனக்கு எதுவும் தெரியாது என கூறி விடுகிறார். ஆனால் ஒருபுறம் பாக்கியா தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுகளை கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அமிர்தா மாமனார் மற்றும் மாமியார் எழில் வீட்டில் இருந்து யாராவது வந்து பேச சொல்கிறார்கள். இதனை தனது அம்மாவிடம் எழில் கூற பிறகு அத்தை, மாமாவை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது அதனால் கண்டிப்பாக இதைப்பற்றி வீட்டில் பேசுவோம் இப்போதைக்கு உன் வேலையை கவனம் செலுத்து எழில் என பாக்யா ஆறுதல் கூறுகிறார்.