சின்ன மீனுக்கு இறைய போட்டு பெரிய மீனை பிடிக்க பார்க்கும் ராதிகா.! கடுப்பில் பாக்யலக்ஷ்மி

baakiyalakshmi-2q
baakiyalakshmi-2q

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில்  ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அதிலிருந்து ஏராளமான பிரச்சனைகள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இனியா ஸ்கூலில் போன் யூஸ் பண்ணி ஆசிரியரிடம் மாட்டிக் கொண்ட நிலையில் இதனை ராதிகா மற்றும் ஈஸ்வரி அவர்களிடம் சொல்ல பயந்து கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்த பிறகு தன்னுடைய அப்பா கோபிக்கு போன் செய்து வர சொல்கிறார் கோபியும் வந்து பேசிவிட்டு செல்ல இதனை தெரிந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி ஸ்கூல்க்கு வருமாறு கூறுகிறார்.

பாக்கியாவும் உடனே ஸ்கூலுக்கு வர பிறகு அனைத்து உண்மைகளையும் பாக்கியாவிடம் கூறிவிடுகிறார்கள். இதனால் கோபத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றவுடன் இதனைப் பற்றி ஈஸ்வரிடம் கூறுகிறார் இனியா வந்தவுடன் இதனைப் பற்றி கேட்க ஈஸ்வரி இனியாவை அடித்து விடுகிறார் இதனால் கோபி பாக்யாவின் வீட்டிற்கு வந்து இனியாவிடம் என்னுடன் வரம் விருப்பம் இருந்தால் நான் உன்னை அழைச்சிட்டு போறம்மா என கூறுகிறார்.

இனியாவும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு கோபியுடன் செல்கிறார் வீட்டிற்கு சென்றவுடன் ராதிகா வெளியில் சென்று விட்டதாக கூறிவிட்டு செல்ல லேட்டாக வருகிறார் உடனே கோபி ஏன் இவ்வளவு லேட் என கேட்க அதற்கு ராதிகா இனியாவிற்கு டிரஸ் வாங்க தான் போனேன் எனக்கூறி வாங்கிய டிரஸ்களை கொடுக்கிறார்.

இதனால் கோபி மகிழ்ச்சி அடைகிறார் அதோடு மட்டுமல்லாமல் ராதிகா இரவு சாப்பிடுவதற்கு சப்பாத்தியும் ஆர்டர் செய்து வைத்துள்ளார் இதனால் கோபி எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருந்து வரும் நிலையில் சந்தோஷப்படுகிறார் ராதிகா இனியாவிடம் சப்பாத்தி எப்படி இருக்கு என கேட்க அதற்கு மையூ என்னம்மா நீங்க செஞ்ச மாதிரியே கேட்கிறீங்க எனக்கு கிண்டல் செய்கிறார்.