விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் ரசிகர்கள் விரும்பும் வகையில் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இனியா தான் ஸ்கூலில் செய்த சேட்டைகள் காரணமாக வீட்டில் இருந்து அம்மா அப்பாவை அழைத்து வரவேண்டும் என ஆசிரியர் கூறியுள்ளார். வீட்டில் இருப்பவர்களிடம் செல்போன் விஷயத்தை கூறினால் தன்னை அடிப்பார்கள் பெரிய பிரச்சனையாகிவிடும் என பயந்து கொண்டு கோபிக்கு போன் செய்து ஸ்கூல் இருக்கு வர சொல்கிறார்.
பிறகு கோபியும் ஸ்கூலுக்கு வந்து தலைமையாசிரியர் யாரிடம் பேசுகிறார் இதனால் இனியாவும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து விடுகிறார். ஆனால் இந்த நேரத்தில் இவ்வாறு இதனைப் பற்றி இனியாவின் மற்றொரு ஆசிரியர் பாக்யாவிடம் கூறிவிடுகிறார்கள். உடனே பாக்கியா ஸ்கூலுக்கு வர கோபி வந்தது பேசியது என அனைத்து விஷயங்களையும் தலைமை ஆசிரியர் பாக்யாவிடம் கூறுகிறார்.
இதனால் கோபமாக இனியாவிடம் பேசுகிறார் ஏன் அம்மா ஸ்கூலுக்கு வந்த என்று கேட்க பாக்கியாவின் கோபத்தை பார்த்து எல்லா விஷயங்களும் பாக்கியாவிற்கு தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொள்கிறார் இனியா. பிறகு இதனை சமாளிக்க இனியா ஏதோ பேச இங்க எதுவும் பேச வேணாம் வீட்டிற்கு வா என்று சொல்லி பாக்யா கோபமாக சொல்கிறார்.
இவ்வாறு இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது மேலும் வீட்டிற்கு சென்றவுடன் இனியாவை ஈஸ்வரி அடிக்க அதனை பார்த்துவிட்டு கோபி வீட்டிற்குள் வந்து இனியா என்னுடன் வர விருப்பம் இருந்தால் நான் அழைத்துக் கொண்டு போறேன் என கேட்கிறார் ஆனால் இனியா எதுவும் சொல்லாமல் அதிர்ச்சி அடைகிறார்.