விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து விஜய் டிவி பல புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில், அமிர்தா இருவரும் வருத்தப்பட்டு வருகிறார்கள்.
எழில் நடந்ததை நினைத்து கண்கலங்க பாக்யா என்னாச்சு என கேட்க நடந்ததை கூறுகிறார் பிறகு பாக்கியா கொஞ்சம் பொறுமையா இரு உனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண போறது இல்ல அமிர்தாவுக்கா உங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறது இல்ல கண்டிப்பா நீங்க ஒன்னு சேருவீங்க என கூறுகிறார்.
இந்நிலையில் இனியா ஸ்கூலுக்கு போகல தலை வலிக்குது என நாடகம் போட பாக்யா திட்டி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார் பின்னர் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்து ஜெனியை பார்த்துவிட்டு ஒரு வாரம் கூட்டிட்டு போய் எங்க வீட்ல வச்சிருந்து அனுப்புறேன் என சொல்லு இங்கேயே இருக்கட்டும் என சொல்ல ஈஸ்வரியும் வளைகாப்பு முடிந்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க அதுவரைக்கும் ஜெனி இங்கேயே இருக்கட்டும் என கூறுகிறார்.
மேலும் இனியா ஸ்கூலுக்கு போனதும் ஈவினிங் குள்ள பேரெண்ட்ஸ் வரணும் இல்லைனா டிசி வாங்கிட்டு போயிடு என ஹெட் மாஸ்டர் கூறுகிறார். பிறகு எழில் அமிர்தாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க சதீஷ் போன் போட்டு ஏன் ஆபீசுக்கு வரவில்லை என கேட்க வர முடியுமான்னு தெரியல என்னுடைய சூழ்நிலை அப்படி இருக்கு என கூற அதிர்ச்சியடைகிறார்.
பிறகு வர்ஷினி எழிலிடமிருந்து உங்களை நெருங்கி நெருங்கி வர நான் வேணான்னு சொல்லிட்டு விலகி போற அமிர்தாவை தேடுறீங்க என பேச என்னுடைய பர்சனல் வாழ்க்கைக்குள்ள தலையிடாதீங்க பணத்தைப் பற்றி ஏதாவது பேசணும்னா பேசுங்க எனக்கு கூறுகிறார். பிறகு சதீஷிடம் எனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல அதற்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறார். பிறகு படம் நடக்குமான்னு தெரியல என சொல்ல படமும் நடக்கும் கல்யாணமும் நடக்கும் என சபதம் எடுக்கிறாள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.