எழிலிடம் சவால் விடும் வர்ஷினி.! தன்னுடைய மகனுக்கு அறிவுரை கூறும் கோபி..

0
baakiyalakshmi
baakiyalakshmi

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்த டிஆர்பியில்  முன்னணி வகித்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தோழி ஒருவர் போனை எடுத்து வந்து செல்பி எடுக்கலாம் என சொல்ல இனியா போனை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது பிரின்ஸ்பல் பார்த்து மாட்டிக்கொள்கின்றனர்.

நாளைக்கு உங்க வீட்ல இருந்து பேரன்ட்ஸ் கூட்டிட்டு வர வேண்டும் இல்லை என்றால் ஸ்கூலுக்கு வர வேண்டாம் என கூறிவிடுகிறார். இதனை தொடர்ந்து மற்றொருபுறம் எழில் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது வரும் வர்ஷினி உங்க வீட்டுக்கு போய் இருந்தேன் என விஷயத்தை சொல்ல நீங்க எதுக்கு என்கிட்ட சொல்லாம என் வீட்டிற்கு போகிறீர்கள் என கோபப்படுகிறார்.

உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்கும் என்ன ரொம்ப புடிச்சிருக்கு எல்லாரும் ரொம்ப ஸ்வீட் என கூறினார். பிறகு அமிர்தா கூட அடிக்கடி போகுறது இல்ல நீங்க எதுக்கு போறீங்க என கேட்க அவங்க போகலைன்னா என்ன நான் போவேன் எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு இல்ல. நான் சொல்றத நீங்க புரிஞ்சுக்கல உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு புரிய வைப்பேன் அவர்களே வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க என்று சொல்ல வைப்பேன் என கூறுகிறார்.

அதன் பிறகு செழியன் வீட்டிற்கு வர கோபி பழம், ஸ்வீட் உள்ளிட்டவற்றை கொடுத்து வீட்டில் கொடுத்துவிடு ஜெனியை நல்லா பாத்துக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். அடுத்து எழில் அமிர்தாவுக்கு போன் செய்ய அமிர்தாவின் குரலில் தயக்கம் இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்குள் அமிர்தாவின் பெற்றோர் எழிலிடம் பேச வேண்டாம் என போனை கட் பண்ணு என சொல்லி விடுகிறார்கள். முதலில் வீட்டில் இருந்து யாரையாவது அழைத்து வந்து பேசட்டும் அதுவரைக்கும் நீ கொஞ்சம் அமைதியா இரு என கூறுகிறார்கள்.