விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி ராதிகாவை வெறுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கோபி ராதிகாவிற்கு இடையே சண்டை ஏற்பட்ட காரணத்தினால் ராதிகா வீட்டை விட்டு வெளியேறியிருந்தார் கோபியும் அமைதியாக இருந்தால் இரு இல்லையென்றால் வீட்டை விட்டு கிளம்பு என்று கூறிவிட்டார் எனவே இதனால் கோபி ராதிகாவிடம் பேசாமல் இருந்து வருகிறார்.
எனவே இதனை பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரி கோபியை ராதிகாவை விவாகரத்து செய்துவிட்டு எப்பொழுதும் போல வீட்டில் இருக்க வேண்டும் என கேட்கிறார் ஆனால் கோபி அது முடியாது என்று நினைக்கிறார். ராதிகா மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் கோபி தொடர்ந்து குடித்து வருவதனால் இனியா கோபியிடம் குடிக்க கூடாது என சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
எனவே கோபியும் இதற்கு மேல் குடிக்க கூடாது என்ற முடிவில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் கோபிக்கு தலைவலி அதிகமாக இருக்க காபி கேட்கிறார் எனவே ராமமூர்த்தி பாக்யாவிடம் சொல்லி ஒரு காபி போட்டு தர சொல்கிறார் அந்த நேரத்தில் கோபியும் கிச்சனுக்கு வர பாக்யா காபி கொடுக்கிறார் இதனை ராதிகா பார்த்துவிட கோபி அதிர்ச்சி அடைகிறார்
எனக்கு காபி வேண்டாம் என கூறி விட்டு கிளம்புகிறார். ராதிகா பாக்கியாவிடம் என்ன கோபியை இம்ப்ரஸ் செய்யலானு பார்க்கிறீர்களா என கூற நான் மாமா சொன்னதனால் தான் காபி கொடுத்தேன் என சொல்கிறார். நீ என்னதான் காபி போட்டுக் கொடுத்தாலும் கோபி எப்படி பயந்து ஓடிப் போனாரு என்ன ராதிகா கூற அதற்கு செல்வி பாக்கி அக்கா கிட்ட வந்து காபி கொடு என்று எப்படி கெஞ்சினார் என்று பார்க்கவில்லையே என கூறுகிறார்.
இதற்கு பாக்யா நான் என்ன முட்டாளா நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும் ராதிகா நான் அவர் வேண்டுமென நினைத்திருந்தால் விவாகரத்து கொடுத்திருக்க மாட்டேன் ஒண்ணுமே இல்ல சும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிகிட்டு இருக்காதீங்க என கூற பிறகு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.