அமைதியா இருந்தா இரு இல்லையென்றால் இப்பவே வீட்டை விட்டு கிளம்பு என ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி.! தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டு அம்மாவை தேடி ஓடிய நிலை..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது கோபி முடிஞ்சா இந்த வீட்டில் இரு இல்லையென்றால் கிளம்பி போ என கூறியவுடன் ராதிகா வீட்டை விட்டு கிளம்பி தனது அம்மா தங்கியிருக்கும் வாடகை வீட்டிற்கு செல்கிறார். அதாவது இன்றைய எபிசோடில் ஆபீஸ்க்கு சென்ற உடன் ராதிகா வேண்டும் என்றே பாக்கியாவை வரவழைத்து விட்டு காக்க வைக்கிறார்.

பாக்கியாவும் கேண்டில் இருக்கும் வேலைகளை போட்டுவிட்டு ராதிகாவிற்காக காத்திருக்க இந்த நேரத்தில் ஆபீஸர் வந்து ஏன் பாக்யா இங்கு காத்திருக்க என கேட்க பிறகு பாக்கியா நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார் எனவே ஆபிசர் பாக்யாவை அழைத்து உங்கள் பர்சனல் விஷயங்களை ஆபீஸில் வைத்துக் கொள்ளாதீங்க.

எதற்காக பாக்கியாவை காக்க வைக்கிறீங்க நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல என கூறுகிறார். பிறகு பாக்யாவிடம் மீண்டும் இப்படி பிரச்சனைகள் நடந்தால் தன்னிடம் வந்து கூறுமாறு சொல்ல பிறகு பாக்யா அங்கிருந்து கிளம்புகிறார். பின்னாடியே ராதிகாவும் வர பாக்யா இதற்கு மேல் இதுபோன்று என்னிடம் பிரச்சனை செய்தால் ஆபிஸரிடம் கூறுவதாக சொல்கிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் பாக்கியா நடந்த விஷயங்களை ஈஸ்வரிடம் சொல்ல அதற்கு ஈஸ்வரி ராமமூர்த்தி வீட்டில் நடக்கும் விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இங்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஆபீஸிற்கு சென்று உன்னை இப்படி பழி வாங்குகிறாள். எனவே கண்டிப்பாக அவளிடம் நான் கேட்பேன் என ஈஸ்வரி சொல்கிறார் இதற்கு பாக்கிய அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை என சொல்ல அதற்கு ஈஸ்வரி நீ இப்படி பெருந்தன்மையாக விட்டுட்டு போவதனால் தான் இவ்வளவு பிரச்சனையும் என சொல்கிறார்.

பிறகு ராதிகா வந்தவுடன் கிச்சனுக்கு செல்ல கைத்தறி பொருட்கள் கீழே விழுந்து விடுகிறது எனவே யார் வீட்டு பொருளை யாரு உடைக்கிறது என ஈஸ்வரி சென்று சண்டை போட தானாக விழுந்து விட்டதாக கூறிவிட்டு காதில் விழாதது போல் கிளம்ப ஈஸ்வரி தடுத்து நிறுத்தி எதற்கு இங்கு நடக்கிற பிரச்சினையை வச்சிக்கிட்டு ஆபீஸில் பாக்கியாவை தொந்தரவு செய்கிறாய் என கேட்க சின்ன குழந்தை இங்கேயும் வந்து சொல்லிடுச்சா என்ன ராதிகா கிண்டல் செய்கிறார்.

இவ்வாறு இந்த சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுதே கோபியும் வீட்டிற்கு வர பிறகு நடந்த விஷயங்களை ஈஸ்வரி சொல்கிறார். அதற்கு கோபி எதற்கு தேவையில்லாம பிரச்சனை செய்யற நீ  அமைதியா இரு ஏன் நீ தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க அம்மா சொல்றதுல எந்த தப்பும் இல்லை நீ வராத வரையும் அனைவரும் எந்த சத்தமும் இல்லாமல் சந்தோஷமா நிம்மதியா இருந்தாங்க இப்ப எப்ப பார்த்தாலும் சண்டை சண்டனு வந்துகிட்டு இருப்பதாக கூறிவிடுகிறார்.

பிறகு ரூமிற்கு சென்றவுடன் ராதிகா கையில் கிடைப்பதை போட்டு உடைக்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தவளை சந்தோஷமா பாத்துக்க முடியல எனக் கூற அதற்கு கோபி நீ பிரச்சனை பண்ணாம அமைதியா இருந்தா எல்லாம் அவங்க வேலையை பார்த்துகிட்டு இருப்பாங்க அப்படி உன்னால இருக்க முடியலனா வீட்டை விட்டு கிளம்பு என கூறுகிறார். எனவே கோபப்பட்டு கொண்டு ராதிகாவும் தான் முன்பு தங்கி இருந்த வீட்டிற்கு செல்ல அங்கு அவருடைய அம்மா சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் எப்ப பாத்தாலும் கோவிச்சுட்டு வந்துடுற எனக் அறிவுரை கூறுகிறார்.