ஆபீஸில் பாக்கியாவை பழிவாங்க நினைத்து மேனேஜரிடம் அசிங்கப்பட்ட ராதிகா.!

baakiya-lakshmi-009
baakiya-lakshmi-009

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மிகவும் இன்ட்ரஸ்ட்டாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் எப்படியாவது பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பழனி பாக்யாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த நிலையில் அவர் குடும்பத்துடன் சேர்ந்த மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் இதனை பார்த்த கோபிக்கு மிகவும் பொறாமையாக இருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் பாக்கியா பழனி இருவரும் கிச்சனில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு நெருக்கமாக பழகியதை பார்த்ததும் மேலும் அவருக்கு கடுப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு அடிக்கடி பழனி வீட்டிற்கு வருவதால் இவர்களுடைய நட்பை கோபி சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பாக்யாவை கோபி விவாகரத்து செய்து இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி என்ற நினைப்பு இருந்து தான் வருகிறது.

மேலும் பாக்யா தான் பெஸ்ட் என்ற எண்ணம் இருந்து வரும் நிலையில் பாக்யா சந்தோஷப்படுவதை பார்த்து வயிற்று எரிச்சலில் கோபி இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா டைனிங் டேபிளில் படிக்க பிறகு தனது ரூமிற்கு அழைத்து சென்று சொல்லித் தருகிறார். எனவே ராதிகா டீ குடிக்கிறீங்களா வேற ஏதாச்சும் வேண்டுமா எனக் கூற அதற்கு கோபி எதுவும் வேண்டாம் குழந்தை படிக்கிறாள் டிஸ்டர்ப் பண்ணாத என கூறி விடுகிறார்.

எனவே இனியா ராதிகாவை பார்த்து நக்கலாக சிரிக்கிறார் இதனை அடுத்து இந்த கோபத்தை அனைத்தையும் பாக்கியாவின் மேல் காட்டும் விதமாக ஆபீசுக்கு சென்றவுடன் கேண்டின் விஷயமாக உங்க கூட கொஞ்சம் பேசணும் என்னுடைய ரூமுக்கு வாங்க என்று பாக்யாவிடம் சொல்கிறார். ஆனால் பாக்யா கேண்டீன் வேலையை முடித்தவுடன் ராதிகா ரூமுக்கு போகிறார் எனவே ராதிகா உள்ளே விடாமல் கொஞ்ச நேரம் வெளியில வெயிட் பண்ணுங்க என கூறுகிறார்.

வெகு நேரம் காத்திருந்தும் ராதிகா பாக்யாவை அலட்சியப்படுத்ததால் கடுப்பாக பிறகு ராதிகாவிற்கு அது ஆப்பாக முடிகிறது. அதாவது அந்த நேரத்தில் மேனேஜர் பாக்யாவை பார்த்து என்ன ஆச்சு ஏன் இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு ராதிகா மேடம் ஏதோ பேசணும் என்று கூப்பிட்டாங்க அதான் வெயிட் பண்றேன் என்று சொல்ல உடனே மேனேஜர் ராதிகாவிடம் அவங்களுக்கு கேண்டில்ல எவ்வளவு வேலை இருக்கும் அவங்க என்ன சும்மாவா இருக்காங்க எப்படி நேரத்தை வேஸ்ட் பண்றீங்க என்று ராதிகாவை கண்டிக்கிறார் இவ்வாறு பாக்கியாவை பழி வாங்க நினைத்த ராதிகாவிற்கு தானாக ஆப்பு அமைந்து விட்டது.