பொறாமையின் உச்சத்தில் கோபி.. இனியா முன்பு அசிங்கப்பட்ட ராதிகா.! பழி வாங்கப்படும் பாக்கியா

baakiyalakshmi-00
baakiyalakshmi-00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கோபி பாக்கியாவை நினைத்து பொறாமைப்பட்டு வருகிறார். அதாவது இன்றைய எபிசோடில் பாக்கியா பட்ட கஷ்டங்களை பற்றி பழனியிடம் ஈஸ்வரி ராமமூர்த்தி கூறுகின்றனர். அதாவது அவள் நிறைய கஷ்டப்பட்டுட்டா நான் இவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி இருந்தா கூட அவ கவலைப்பட்டு இருக்க மாட்டாள்.

ஆனால் பொய் சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டான். கோபி நல்ல அப்பாவாகத்தான் இருந்தான் பிள்ளைங்க கேட்பதற்கு முன்னாடியே அவங்களுக்கு தேவையானதை செஞ்சிடுவான் ஆனால் இடையில தான் அந்த பொண்ணு வந்து இப்படி ஆயிடுச்சு என கூறுகின்றனர். இவ்வாறு பாக்யாவை பற்றி இவர்கள் கூறிய நிலையில் பிறகு பழனி கிச்சனுக்கு செல்கிறார் அங்கு செல்வி, ஜனனி, பாக்யா மூவரம் சேர்ந்து சமைத்துக் கொண்டிருக்க பிறகு தான் செஞ்ச ஸ்வீட்டை அனைவருக்கும் தருகிறார்.

உடனே பழனி நீங்க எப்படி இவ்வளவு கஷ்டங்களை தாங்க நீங்க என கேட்காததற்கு என் மாமனார் மாமியார் எனக்கு துணையாக இருக்கிறார்கள் செல்வி என்னுடைய வலது கை மாதிரி இவங்க எல்லாம் இருக்கும்பொழுது எனக்கு என்ன கவலை எனக் கூறுகிறார். இதனை அடுத்து அனைவரும் சென்றவுடன் பழனி பாக்யா இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோபி கிச்சனுக்கு வருகிறார்.

அப்பொழுது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அப்படி என்ன சிரித்து சிரித்து பேசிக்கொள்கிறார்கள் நான் பண்ணுனா மட்டும் எல்லாம் தப்பு இவள் பண்ணுனா யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க கிச்சன் வரையும் வந்துட்டான். இவ என்ன பண்ணுனா எனக்கு என்ன என் பையன் இரண்டு பேரும் லெஃப்ட் ரைட் என்று இரண்டு பக்கமும் வாயை உடைப்பேன்னு சொல்றாங்க இவ ஏதோ பண்ணட்டும் என கூறிவிட்டு சொல்கிறார்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து கீழே வந்து எங்க யாரையும் காணோம் என தேடிக் கொண்டிருக்க பிறகு இனியா கிச்சனில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது யாரோ கெஸ்ட் வந்து இருக்காங்களே அவங்க போய்ட்டாங்களா என கேட்க பழனியங்கள் போய்விட்டார் அப்போவே என சொல்கிறார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தூங்கி விட்டதாகவும் அம்மா மாடிக்கு துணி எடுக்க போயிருப்பதாகவும் சொல்ல பிறகு ஏன் இங்கு உட்கார்ந்து படிக்கிற என கேட்கிறார்.

அதற்கு இனியா எனக்கு தான் ரூம் இல்லையே எனக் கூற அதற்கு கோபி சாரிமா என கூறிவிட்டு தனது ரூமிற்கு கூப்பிடுகிறார்‌. நான் எப்படி அங்கே வர முடியும் அவங்க தா இருப்பாங்களே என சொல்ல இப்பொழுது அவ இல்ல வா நம்ப போகலாம் நான் உனக்கு சொல்லித் தருகிறேன் என்று அழைத்து செல்கிறார். பிறகு இனியாவை தனது ரூமிற்கு அழைத்து சென்று டெஸ்ட் வைக்க அப்பொழுது ராதிகா வருகிறார்.

கோபியிடம் டீ வேண்டுமா எனக் கேட்க அப்புறமா பாத்துக்கலாம் என கோபி கூறுகிறார் மேலும் இதற்கு மேல் டிஸ்டர்ப் பண்ணாத என சொல்கிறார். ஆனால் தொடர்ந்து ராதிகா டிஸ்டர்ப் பண்ண இப்படி எல்லாம் பண்ணாத ராதிகா குழந்தை படிச்சுக்கிட்டு இருக்கா ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்ற எனக் கூற அதற்கு இனியா ராதிகாவை பார்த்து நக்கலாக சிரிக்கிறார்.

பிறகு இதனை அடுத்து மறுநாள் பாக்கி ஆபீஸ்க்கு செல்ல ராதிகாவை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் ராதிகா வேண்டும் என்றே ரொம்ப நேரம் பாக்கியாவை காக்க வைத்து மகிழ்ச்சி அடைகிறார் இதனால் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் கடுப்பில் யோசித்துக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.