நீ சேல்ஸ்மேன்னா என கோபியை அசிங்கப்படுத்திய பழனி.! பாக்கியாவிடம் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து வைத்து வயித்தெரிச்சல் பட்டு இப்ப என்ன பிரயோஜனம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து மிகவும் சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வரும் நிலையில் இனியா தன்னுடைய அம்மாவின் ஆசையான அதிக மார்க் எடுத்து நிறைவேற்றி உள்ளார்.

இவ்வாறு இதனை அடுத்து இன்றைய எபிசோடில் பழனி பாக்கியா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது பழனி, ஈஸ்வரி, பாக்கியா அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வர யாரோ கெஸ்ட் வந்து இருக்காங்க போல என நினைக்கிறார்.

அப்பொழுது பழனியை பார்த்தவுடன் ஷாக் ஆகிறார். உடனே மனதிற்குள் எப்படி சிரிக்கிறான் பாரு அப்படி என்ன ஜோக் அடிச்சுட்டா குடும்பமே சிரிக்குது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பழனி கோபி வாசலில் நிற்பதை பார்த்துவிட்டு ஏங்க அங்க யாரோ வந்திருக்காங்க பாருங்க என கூற அனைவரும் கோபியை பார்க்கின்றனர்.

பிறகு கோபி எந்த ஒரு சத்தமும் போடாமல் கடகட என வீட்டிற்குள் வர இதனால் பழனி யாருப்பா நீ  சார் எங்க போறீங்க எத்தனை பேரு உட்கார்ந்து இருக்கோம் உங்களுக்கு கண்ணு தெரியலையா. நீங்க பாட்டுக்கு உள்ள போய்கிட்டே இருக்கீங்க அட்ரஸ் ஏதாச்சும் மாறி வந்துட்டீங்களா என கேட்டுவிட்டு கையில் இருக்கும் பையை பார்த்துவிட்டு நீங்க சேல்ஸ்மேன்னா என கேட்கிறார்.

ஒரு சேல்ஸ்மேன் கஷ்டம் என்னனு எனக்கு தெரியுங்க ஆனா இப்படி நாலு பேரு உட்கார்ந்து இருக்கும்பொழுது கேட்காம நாகரிகம் இல்லாமல் வீட்டிற்குள் போக கூடாதுங்க. என்ன சோப்பு, சீப்பு, கொசு பேட்டு ஏதாச்சும் விக்கிறீர்களா எனக் கூறியவுடன் எழில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்குற சத்தம் கேட்ட பாக்யா எழிலை முறைக்கிறார்.

இதற்கு கோபி நக்கலாக சிரித்து விட்டு பழனி கூப்பிட காதில் வாங்காததுபோல் வீட்டிற்குள் சென்று விடுகிறார். பிறகு அனைவரிடமும் அந்தாளுபாட்டுக்கு உள்ள போய்கிட்டு இருக்காரு நீங்க எல்லாம் பேசாம இருக்கீங்க எனக் கேட்கிறார். அதற்கு ராமமூர்த்தி தம்பி அவன் தான் இந்த பசங்களுக்கு எல்லாம் அப்பன் என சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி அவன் என் பையன் கோபி என கூறியவுடன் பழனி ஐயையோ என ஷாக் ஆகிறார். அது சாருங்களா சாரி சாரி என்ன மன்னிச்சிடுங்க தப்பா எடுத்துக்காதீங்க அப்படியெல்லாம் பேசி எனக்கு பழக்கம் இல்ல நான் வேணா போயி சார்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்துடுறேன் எனக் கூற அதற்கு எழில் அதெல்லாம் வேணாம் என சொல்லி விடுகிறார்.

அது எல்லாம் ஒன்னும் பரவாயில்லை என அனைவரும் கூற எதுவும் அவர் தப்பா எடுத்துக்க மாட்டாறே எனக் கூறுகிறார். பிறகு இதனை அடுத்து அனைவரும் பேசி முடித்தவுடன் பாக்யா பழனி இருவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்க பாக்யா பழனிக்காக சமைத்து தருகிறார். மேலும் இதனை சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபிக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது.

Leave a Comment