ஸ்வீட்டை கொடுத்து ரஞ்சித்தை கரெக்ட் பண்ணும் பாக்கியா.! கேண்டின் திறப்பு விழாவிற்கு வர முடியாது என கூறும் ஈஸ்வரி..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் இதற்கு மேல் இந்த சீரியலின் கதை வேற டிராக்கில் செல்ல இருக்கிறது.

அதாவது அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பாக்யா கோபியை மையமாக வைத்து பல எபிசோடுகள் ஒளிபரப்பானது இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பாக்கியா பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இவ்வாறு தற்பொழுது தான் இவருடைய வாழ்விற்கு விடிவு காலம் கிடைத்துள்ளது. அதாவது வீட்டில் சமைத்து தருவது தன்னுடைய பிள்ளைகள், கணவர், மாமனார், மாமியார் ஆகியோர்களை பார்த்துக் கொள்வதை முழு நேர வேலையாக வைத்திருந்த பாக்யா தற்பொழுது தனக்கு பிடித்த வேலைகளையும் செய்யத் தொடங்கி கலக்கி வருகிறார்.

பாக்கியா கேட்டரிங் நடத்தி வந்த நிலையில் தற்போது தான் இந்த வேலை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பாக்யாவிற்கு தொடர்ந்து அடுத்தடுத்து கேட்டரிங் ஆர்டர் கிடைத்து வந்ததால் தற்பொழுது ராதிகாவின் ஆபீசிலும் கேண்டில் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே கேண்டின் திறப்பு விழா நடக்க இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் பாக்கியா ஈடுபட்டு வருகிறார்.

அதாவது இன்றைய எபிசோடில் பாக்கியா ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பக்காவாக பதில் சொல்லி அனைவரிடமும் பாராட்டுகளை பெறுகிறார் மேலும் ரஞ்சித்திற்காக இன்று அதிரசம் செய்து எடுத்து வந்துள்ளார் அதனை சாப்பிட்டு விட்டு ரஞ்சித் சூப்பராக இருப்பதாக கூறுகிறார்.

மேலும் பாக்கியா அங்கு இருக்கும் அனைவரையும் தன்னுடைய கேட்டரிங் திறப்பு விழாவிற்கு அழைக்க கண்டிப்பாக வருவதாக ரஞ்சித் கூறுகிறார். பிறகு இதனைப் பற்றி பாக்கியா தன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடம் கூற பாட்டி வர முடியாது எனக் கூறி விடுகிறார். ஆனால் ராமமூர்த்தியை கண்டிப்பாக அவள் வருவார் என கூற அடுத்த நாள் அந்த விழாவிற்கு ரஞ்சித் செல்கிறார் பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.