விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல திருப்பங்களுடன் சமீப காலங்களாக இந்த சீரியலின் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த சீரியலுக்கு புதிதாக பிரபல நடிகர் ரஞ்சித் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இதற்கு மேல் கோபியின் கேரக்டர் குறையும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு வந்தார்.
எனவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏனென்றால் இந்த சீரியல் மிகவும் காமெடியாக செல்வதற்கு முக்கிய காரணம் கோபி தான் ஒரு காலகட்டத்தில் இவருக்கு தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்கள் வந்தாலும் கூட இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அதுவும் முக்கியமாக ராதிகாவை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு படாத பாடு பட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொள்வதற்காக கோச்சிங் கிளாஸ் சென்றுள்ளார் அங்கு ரஞ்சித்துடன் கடலை போட்டு வரும் நிலையில் ரசிகர்கள் இந்த சீரியலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மறுபுறம் இனியா தன்னுடைய காதலருடன் டியூஷன் சென்று விட்டு வரும் நேரத்தில் இதனை பாக்யா பார்த்து விடுகிறார் உடனே இனியா அதிர்ச்சியடைய பிறகு பாக்யா இருவரும் பிரண்ட்ஸ் தான என விட்டுவிடுகிறார்.
இவ்வாறு அம்மா, பொண்ணு என இருவரும் மாறி மாறி தனி ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த கதை எங்கு சென்று போய் முடிய போகிறது என்பது தெரியவில்லை . மேலும் மறுபுறம் பாக்கியா பாட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் நேரத்திற்கு மாத்திரை தர வேண்டும் என அமிர்தா, ஜெனி இருவரிடமும் கூறியுள்ளார்.
எனவே ஜெனி தூங்கி விடுவதால் அமிர்தா பாட்டிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது பாட்டி எதற்கு என் ரூமுக்கு வந்த ஜெனி எங்க முதல வெளில போ என்று கூற அதற்கு அமிர்தா ஜெனி தூங்கிட்டாங்க இப்ப மாத்திரை போடுவீங்களா மாட்டீங்களா எனக்கூறி அங்கே அமர்ந்து கொள்கிறார். பிறகும் வாயில் மாத்திரையை வைத்து விட ஈஸ்வரி அதனை முழுங்குகிறார். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் அமிர்தாவுக்கு தைரியம் அதிகம் தான் என கூறி வருகின்றனர்.