ரஞ்சித்துடன் கடலை போட்ட பாக்கியா.! தன் காதலருடன் கையும் களவுமாக மாட்டிய இனியா.. பரபரப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பாக்கியாவிற்கு சாதகமான பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராதிகா பாக்யாவை இங்கிலீஷ் தெரியாது என அசிங்கப்படுத்த நினைத்த நிலையில் பாக்யா இங்கிலீஷ் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்யா இங்கிலீஷ் கற்றுக் கொள்வதற்காக கோச்சிங் கிளாஸ் சென்றிருக்கும் நிலையில் அங்கு ரஞ்சித்துடன் அதிகமாக பேசி வருகிறார். அந்த வகையில் ராதிகா பணியாரம் எடுத்து செல்ல அதனை சாப்பிட்டு விட்டு ரஞ்சித் மிகவும் அருமையாக இருப்பதாக கூறுகிறார் மேலும் இவர் பண்ணையார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவரை பலரும் பண்ணையார் என அழைத்து வருகின்றனர். ரஞ்சித் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் பண்ணையாருனு சொன்னா சிட்டியில்ல சிரிப்பாங்க என கூறுகிறார் பிறகு நாங்க விவசாய குடும்பம் பள்ளிக்கூடத்துக்கு போனேன் ஆனா ஒன்னும் மண்டையில ஏறல அதுக்குள்ள எங்க அப்பா சாமி கிட்ட போயிட்டாரு எனக் கூற அதற்கு பாக்கியா இங்கிலீஷ் தெரிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு என சொல்கிறார் இவ்வாறு ரஞ்சித்துடன் பாக்கியா மிகவும் ஜாலியாக பேசி வருகிறார்.

இதனை அடுத்து பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்சை முடித்துவிட்டு வீடு திரும்ப அந்த நேரத்தில் இனியா தன்னுடைய புதிய காதலருடன் பேசி வருவதை பார்த்துவிடுகிறார். இதனால் இனியா அதிர்ச்சி அடைய பாக்கியா பக்கத்தில் சென்று அந்தப் பையனிடம் நீயும் இனியாவுடன் டியூஷன் படிக்கிறியாப்பா என கேட்கிறார்.

அதற்கு ஆமா எனக்கு சொல்ல இனியாவை நல்லா இருக்கியா மா? நல்லா படிக்கிறியா என்ன விசாரிக்கிறார் இனியா அம்மாவிடம் மாட்டிக் கொண்டோமே என பயத்தில் இருக்க ஆனால் பாக்கியா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.