தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஃபுல்லாக குடித்து வந்து அனைவரிடமும் பிரச்சனை செய்து வருகிறார். எனவே இவ்வாறு கோபி குடித்து வந்ததை பார்த்த ராதிகா, ராமமூர்த்தி அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் பிறகு இனியா இவ்வாறு அப்பா குடிப்பதற்கு காரணம் நீங்கள் தான் எனக் கூற பிறகு ராமமூர்த்தியும் அந்த வீட்டில் இருக்கும் வரையில் ஒருமுறை கூட இவ்வாறு குடிச்சிட்டு வந்தது இல்லை நான் உன்னால்தான் குடிக்கிறான் என கூறவில்லை இருந்தாலும் அவனை பார்த்துக் கொள் என கூறிய விட அப்பனா கோபி குடிப்பதற்கு நான் தான் காரணமா என ராதிகா கேட்கிறார்.
மறுநாள் கோபி எழுந்தவுடன் கட்டிலில் அமர்ந்து புலம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது ராதிகா வர ராதிகாபிடம் மன்னிப்பு கேட்க கோபப்பட்டு கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார். பிறகு இனியாவிடம் மன்னிப்பு கேட்க ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என சொல்கிறார் அந்த நேரத்தில் கோபி வந்து உட்கார நேத்து நைட் டிரிங்க்ஸ் பண்ணிட்டு வந்தீங்க உங்கள பாக்கவே பயமா இருக்கு என மையூ கூற இனிமேல் குடிக்க மாட்டேன் என சொல்கிறார் கோபி.
அதன் பிறகு ராதிகா இருவரையும் நான் ஸ்கூலில் ட்ராப் செய்து விடுகிறேன் வாங்க என சொல்ல கோபி வேண்டாம் நானே போறேன்னு சொல்கிறார் ஆனால் ராதிகா தேவையில்லை என கூறிவிட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அதன் பிறகு ராமமூர்த்தி வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறது பார்த்துக்கோ என அறிவுரை கூறுகிறார்.
பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரி மற்றும் செழியனிடம் கோபி குடித்து வந்த விஷயங்களை பற்றி கூற ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். மேலும் கோபியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட செழியன் ஆபீஸ் பார்ட்டி ஏதாவது இருந்திருக்கும் அதனால் தான் குடித்து இருப்பார் என சமாளிக்கிறான். ஒருபுறம் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போய் இருக்கும் அங்கு இங்கிலீஷ் பேச கத்து கொள்கிறார்.
இதனை அடுத்து கோபி ராதிகாவிடம் மன்னிப்பு கேட்க ராதிகா இதற்கு மேல் இப்படி குடிச்சிட்டு வந்தீங்கன்னா இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் கல்யாணத்துக்கு முன்னாடி நிம்மதியாக இருந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக கூறுகிறார்.