விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தெரியாமல் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்.
அதாவது சமீப காலங்களாக பாக்யாவிற்கு தொடர்ந்து கேட்டரிங் ஆர்டர் கிடைத்துவரும் நிலையில் இதன் மூலம் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் ராதிகா பணியாற்றி வரும் ஆபீசில் கேண்டி நடத்துவதற்கான சான்ஸ் கிடைத்துள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் ராதிகா பாக்கியாவிடம் இங்கிலீஷ் பேசி அசிங்கப்படுத்த முயற்சி செய்தார்.
ஆனால் உஷாரான பாக்யா தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக கிளாஸ் செல்ல இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சீரியலுக்கு தற்பொழுது பிரபல நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்துள்ளார். எனவே இதன் மூலம் ராதிகா, ரஞ்சித் இருவருக்கும் இடையேயான காட்சிகள் தான் அதிக அளவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அந்த வகையில் இத்தனை நாளாக இந்த சீரியலின் ஒரு தூணாக இருந்து வந்த கோபி இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்தின் அளவு குறைய போகிறது. கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் எனவே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், இதற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் என்னுடைய கேரக்டர் குறைவாகத்தான் இருக்கும் எனவும் வயதான காரணத்தினால் ரெஸ்ட் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் ரஞ்சித் சார் பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்திருக்கும் நிலையில் கண்டிப்பாக இதுவரையிலும் கொடுத்தது போலவே உங்களுடைய ஆதரவை இதற்கு மேலும் தர வேண்டும் என அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனவே இதனை பார்த்த ரசிகர்கள் வருத்ததில் இருந்து வருகின்றனர்.
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் – Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023