பாக்கியாவிடம் மிகவும் பங்கமாக அசிங்கப்பட இருக்கும் ராதிகா.! காத்திருக்கும் செல்வி..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து பாக்யாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் என்ன செய்தாலும் பாக்கியா அதிலிருந்து தப்பித்து தன்னால் முடிந்த டப்ஃபை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் காபி போட்டு தரட்டுமா என கேட்க அதற்கு வேண்டாம் நானே போட்டுக்கிறேன் என கூறுகிறார் பிறகு ராமமூர்த்தியும் வேண்டாம் என சொல்ல ராதிகா வாசலை பார்த்துக்கொண்டு இருக்க கோபி என்ன விஷயம் என கேட்கிறார். பிறகு அந்த நேரத்தில் இனியா வர இவ்வளவு நேரமா எங்க போயிருந்த என சத்தம் போடாத அதுக்கு இனியா நீங்க கார்ல வந்தீங்க நான் சைக்கிள்ல வந்தேன் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல என கூற அதற்கு ராதிகா நாளையிலிருந்து நீ சைக்கிளில் டியூஷன் போகாத என கூறுகிறார்.

பிறகு இனியா அதை நீங்க சொல்லாதீங்க நான் சைக்கிள்ல தான் போவேன் என சொல்கிறார் இவ்வாறு பழையபடி தாத்தாவை உன்னை கூட்டிட்டு போகட்டும் என சொல்ல தாத்தாக்கு முடியலன்னு தான் சைக்கிள் வாங்குனது என இனியா கூறுகிறார். உடனே ராதிகா நாளையில் இருந்து ஒரு ஆட்டோ அரேஞ்ச் பண்ணலாம் அப்பதான் யார் கூடயும் பேசாம நேரா வீட்டுக்கு வருவாய் என சொல்ல கோபி எதுக்கு தேவையில்லாம செலவு எனக்கு கேட்க ராதிகா இவ  ஆட்டோல போயிட்டு வரட்டும் அவ்வளவுதான்  சொல்லிட்டேன் என்ன சொல்ல நீங்க யார் நான் எதுக்கு ஆட்டோவுல போகணும் என்னால போக முடியாது என சொல்லி சத்தம் போடுகிறார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் கோபிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பாக்கியா மீண்டும் பழனிசாமி சொல்லித் தர பிறகு இதன் மூலம் கேக் செய்து கேண்டினில் பாக்கியா விற்கிறார். அதன் பிறகு ராதிகா இன்னைக்கு ஈவினிங் நீங்க செஞ்ச கேக்கு இருக்கணும் இல்லை என்றால் கேண்டின் கான்ட்ராக்டர் கேன்சல் பண்ணிடுவதாக கூறி மிரட்டுகிறார்.

பாக்யா நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் எனக்கு கேக்கு வரல கொஞ்சம் டைம் கொடுங்க என கூற டைம் தர முடியாது ஈவினிங் கேக் கேண்டின்கு வர வேண்டும் என ராதிகா மிரட்டுகிறார் ஆனால் சாயங்காலம் வரட்டும் என செல்வி, பாக்யா இருவரும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.