இனியாவை நடுரோட்டில் மிரட்டிய ராதிகா.! எதுத்து கேள்வி கேட்ட கோபி.. உச்சகட்ட கோபத்தில் ராமமூர்த்தி

baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சமீப காலங்களாக ராதிகா எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் எனவும் கோபியின் அப்பா, அம்மா தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நினைத்து வருகிறார்.

அந்த வகையில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கேண்டினில் புதிய புதிய ஆர்டரை போட்டு வருகிறார். அந்த வகைகள் சல்வாரை அணிந்து கொண்டுதான் அனைவரும் வேலைக்கு வரவேண்டும் என கூறிய நிலையில் அதேபோல் பாக்யா செல்வி என பணிபுரியும் அனைத்து பெண்களும் சர்வாரில் வந்தனர். இதனால் ராதிகா மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தார்.

இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் கேண்டினில் பேக்கரி ஐட்டம் வரவேண்டும் என கூறியுள்ளார். எனவே பாக்கியா பழனிசாமியிடம் எப்படி கேக் செய்வது என்பதை வீடியோ கால் மூலம் தன்னுடைய மருமகளின் துணையுடன் கற்றுக் கொள்கிறார். இன்றைய எபிசோடில் இனியா சரணுடன் டியூஷன் முடிந்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் நடந்து வருகிறார்.

அதனை பார்த்த ராதிகா இவர்களை மிரட்ட அதற்கு நான் சைக்கிளில் நடந்து வருவதாக கூறி விடுகிறார். பிறகு வீட்டிற்கு சென்றவுடன் இனியா கோபப்பட எதற்கு அந்தப் பையன் கூட நடந்து வர இது எனக்கு சரியா படல என சொல்ல இதுல என்ன இருக்கு நீ ஏன் இப்ப கோவப்படுற என கோபி கூறுகிறார்.

அதே போல் ராமமூர்த்தியும் அவ எந்த தப்பும் பண்ண மாட்டா நீ கேட்க வேண்டாம் எனக் கூற இதனால் ராதிகா அனைவரும் முன்பும் அசிங்கப்படுகிறார். இதனை அடுத்து மறுபுறம் மீண்டும் பாக்கியாவிற்கு கேக் செய்ய ராமமூர்த்தி கருத்து தருகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.