விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது ராதிகா எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். மேலும் பாக்கியா தொடர்ந்து தன்னுடைய கேட்டரிங் தொழிலில் முன்னேறி வரும் நிலையில் இதனை பார்த்து கோபி ஆச்சரியப்படுகிறார்.
அதாவது கோபிக்கு வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பணத்தில் இன்னும் 20 லட்சம் ரூபாய் மீதி இருந்த நிலையில் அதில் 2 லட்சம் ரூபாயை ஒரே வாரத்தில் பாக்யா கொடுத்துள்ளார். மீதி பணத்தை தர வேண்டும் என்பதற்காக பாக்யா தொடர்ந்து கேட்டரிங் தொழில் ஆரம்பித்து வருகிறார் அந்த வகையில் இவருக்கு ராதிகா பணியாற்றி வரும் ஆபீஸில் கேண்டி நடத்துவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது.
எனவே கோபி, ராதிகாவிற்கு இது அதிர்ச்சியாக இருந்து வரும் நிலையில் ராதிகா இங்கிலீஷ் பேசி பாக்கியாவை அசிங்கப்படுத்த முயற்சித்தார் ஆனால் பாக்யா இனிமேல் இப்படி நடக்க கூடாது என்பதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொள்வதற்காக கிளாஸ் போக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் பிரபல முன்னணி நடிகர் ரஞ்சித் கோபிக்கு போட்டியாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இன்று எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு வெளியில் கார் நிற்கிறது எனவே இதனை எடுக்க சொல்லி லாரி காரர் கூற அப்பொழுது கோபி கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் பாக்கியா எழிலிடம் நான் காரை எடுக்கிறேன் நீ தான் சொல்லித் தந்திருக்கிறீர்ல என கூற பிறகு தாறுமாறாக காரை ஓட்டுகிறார்.
கோபி பாக்யாவா இது என ஆச்சரியப்பட பிறகு இவர் காய் வாங்கிக் கொண்டு செல்வதை எழில் நக்கலாக பார்க்கிறார். இவ்வாறு தொடர்ந்து பாக்யா தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வரும் நிலையில் அது கோபிக்கு ஆச்சரியமாக இருக்கிறது எனவே இதனைப் பற்றி ராதிகாவிடம் கூறினால் கோபிக்கு தான் லாஸ்டில் பனிஷ்மென்ட் கிடைக்கிறது.