விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வருகின்றது அந்த வகையில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ராதிகா மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். எனவே கோபி என்ன செய்வது என்று தெரியாமல் கடுப்பிலிருந்து வருகிறார். அதாவது இன்றைய எபிசோடில் இனியா நிலா பாப்பாவின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
அங்கு கோபி இனியாவுடன் சாப்பிடுவதற்காக காத்திருக்கிறார் இதனால் ராதிகா கோபிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது எனவே ராமமூர்த்தியும் எப்ப பார்த்தாலும் வீட்டில் சண்டை நடப்பதாக கூறுகிறார். இதன் காரணமாக ராதிகா கோபியை தனியாக அழைத்து சென்று யாரும் இந்த வீட்டில் என்னை மதிக்க மாட்டேங்குறாங்க உங்க அம்மா, அப்பா என்ன எப்பொழுது ஏத்துப்பாங்க என கேட்கிறார்.
அதற்கு கோபி ராதிகா நான் உன்னுடைய புருஷன் உனக்கு நான் இருந்தால் போதாதா என கேட்க அதற்கு அதெல்லாம் முடியாது எப்பொழுது உங்க அம்மா, அப்பா என்னை மருமகளாக ஏத்துப்பாங்க மையூ உங்களை அப்பானு ஏத்துக்கிட்டால அதே மாதிரி அவங்களும் ஏத்துக்கணும் என கத்துகிறார். எனவே இவருடைய தொல்லை தாங்க முடியாமல் கோபியும் அதற்காக முயற்சி செய்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.
அந்த நேரத்தில் எழிலை பார்க்க என்ன உங்க அம்மா ஒருத்தவன் கூட வண்டில போறது, சிரிச்சு பேசுறதுனு இருக்கா இந்த வயசுல இதெல்லாம் தேவைதானா என கேட்க அதற்கு எழில் அம்மாவை பத்தி எங்களுக்கு தெரியும் அவங்க நீங்க இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்காங்க எனக்கூறி அசிங்கப்படுத்துகிறார். இதனால் கடுப்பான கோபி ஃபுல்லாக குடிக்க இதனால் ராதிகா என்ன ரியாக்ஷன் செய்யப் போகிறார் என்பது நாளை எபிசோடில் தெரியவரும்.