பாக்கியா-பழனிசாமி சிரித்து பேசுவதை பார்த்து வயித்தெரிச்சலில் கோபி.! கடும் கோபத்தில் ராதிகா..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

அந்த வகையில் ஒருபுறம் ராதிகா வேலை செய்து வரும் ஆபஸில் கேண்டி நடத்திவரும் நிலையில் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. அதேபோல் ராதிகா பாக்கியாவிற்கு இங்கிலீஷ் தெரியாது என அசிங்கப்படுத்த முயற்சி செய்த நிலையில் பாக்கியா தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சேர்ந்துள்ள நிலையில் இங்கிலீஷ் கற்று வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது நிலா பாப்பாவின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது எனவே இதற்காக பாக்கியா தன்னுடைய பிரண்ட்ஸை வர வைக்கிறார். அந்த வகையில் பழனிசாமியும் வந்து ஈஸ்வரி ,ராமமூர்த்தி என அனைவரிடமும் பேசி மகிழ்ச்சி அடைகிறார். எனவே ஈஸ்வரி நீங்க வந்தா வீடு கலகலப்பா இருக்கு அடிக்கடி வாங்க எனக் கூறுகிறார்.

பிறகு அனைவரும் கிளம்பும் நேரத்தில் பாக்கியா எழில் இருவரும் இணைந்து அவர்களை வழி அனுப்புவதற்காக வெளியில் செல்கின்றனர். அந்த நேரத்தில் பாக்யா பழனிசாமி உடன் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் இதனை பார்த்த கோபிக்கு வயித்தெரிச்சலாக இருக்க அப்படி அவங்க என்ன பேசிப்பாங்க என பதட்டம் அடைகிறார்.

பிறகு கோபி வீட்டிற்கு சென்றவுடன் ராதிகா சாப்பிடுவதற்காக அழைக்கிறார் அப்பொழுது இனியா வரடும் சாப்பிடலாம் என கோபி கூறுகிறார் இதனால் இவர்களுக்கிடையே சண்டை வர ராமமூர்த்தியும் ராதிகாவை குறை சொல்ல உடனே ராதிகா கோபியிடம் எப்ப பார்த்தாலும் என்னை தான் குறை சொல்றீங்க அவங்களை எதுவுமே சொல்ல மாட்டீங்களா என கேட்டு சண்டை போடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.