விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சமீப காலங்களாக பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது பாக்கியா வீட்டில் அமிர்தாவின் மகள் நிலாவுக்கு பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
எனவே இதற்காக பாக்கியா தன்னுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்று வரும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைக்கிறார். பழனிசாமியும் வர ஈஸ்வரியை அக்கா எனக் கூப்பிட்டு எடுத்த உடனே மயக்கி விடுகிறார். பிறகு நிலா பாப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐ அம் பரிசையும் கொடுத்துவிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது ஈஸ்வரி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என கேட்க அதற்கு எழில் என்ன பாட்டி இப்படி கேட்டுட்டீங்க பழனி சாருக்கு இப்பதான் 25 வயது ஆகிறது என கூற அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு பழனிசாமி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என் கூட பிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் அனைவரும் பெண் பிள்ளைகள்தான்.
எனவே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தினால் தற்பொழுது எனக்கு வயதாகி விட்டது. நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பா இறந்து விட்டார் எனவே அப்பா வைத்திருந்த கடை, ஆட்டுப்பண்ணை, கோழி பண்ணை என அனைத்து தொழிலையும் தனியாளாக பார்த்துக் கொண்டு வருகிறேன்.
மேலும் அப்பா விட்டுட்டு போனதை அப்படியே வைத்திருக்கக் கூடாது என பிசினஸ் ஆரம்பித்தேன் அது ஒரு கம்பெனி இரண்டு கம்பெனி ஆனது தற்பொழுது மூன்று, நான்கு, ஐந்து என போய்க்கொண்டே இருக்கிறது எனக் கூற அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு இதனை எல்லாம் கேட்டுவிட்டு ஈஸ்வரி பொண்ணு பார்த்து விடலாமா என பழனிசாமிடம் கேட்க அனைவரும் சிரிக்கிறார்கள்.