நிலா பாப்பாவின் பிறந்தநாளுக்கு வந்த பழனிசாமி.! அதிர்ச்சியில் கோபி..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக ராதிகா எப்படியாவது பாக்யாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.

எனவே இதற்காக பல முயற்சிகள் செய்தாலும் அனைத்தையும் வெற்றி பெற்று பாக்கியா கெத்து காமித்து வருகிறார். அந்த வகையில் கேண்டின் நடத்த வேண்டும் என்றால் அதற்காக அனைவரும் ஒரே மாதிரியான சல்வார் அணிந்து வரவேண்டும் அப்படி இல்லை என்றால் யாரும் வேலைக்கு வராதீர்கள் என கூறிய நிலையில் பாக்யா, செல்வி என அனைவரும் சர்வரில் வந்து கலக்குகின்றனர்.

மேலும் ராதிகாவை அசிங்கப்படுத்த பிறகு இன்றைய எபிசோடில் கேண்டின் வேலையை முடித்து விட்டு அதே சுடிதாரில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்கிறார். அங்கு இருப்பவர்கள் இவர் சுடிதாரில் வருவதை பார்த்துவிட்டு வியந்து பார்க்கிறார்கள் மேலும் பழனிசாமி நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்க என பாராட்டுகிறார்.

இந்த நேரத்தில் பாக்கியா தன்னுடைய பேத்திக்கு பிறந்தநாள் எனவும் அனைவரும் வீட்டிற்கு வருமாறு கூறுகிறார் அதற்கு பழனிசாமி என்னை விட வயதில் சிறியவங்க நீங்க உங்க பேத்திக்கு பிறந்தநாள் என கூப்பிடுறீங்க எனக் கூற அதற்கு பாக்கியா உங்களுக்கு பொண்ணு பார்த்து விடலாமா என கேட்கிறார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பாக்கியா எழில் அமிர்தாவிற்கு தெரியாமல் பர்த்டே செலிப்ரேஷனுக்காக டெக்கரேஷன் செய்து வருகிறார்கள். இதனை பார்த்துவிட்டு ஈஸ்வரி கேட்க அப்பொழுதுதான் நிலாவுக்கு பிறந்தநாள் என்பதை கூறுகிறார். ஏன் என்னிடம் சொல்லவில்லை என ஈஸ்வரி கேட்க இந்த எல்லா வேலையும் முடித்துவிட்டு சொல்லலாம் என நினைத்ததாக கூற பிறகு அனைவரும் வருகின்றனர்.

பழனிசாமி மற்றும் மற்ற நண்பர்களும் வர மிகவும் சிறப்பாக நடைபெற்ற முடிகிறது. பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி பழனிசாமியிடம் பேச பிறகு உங்களுக்கு பொண்ணு பார்த்திடலாமா என கேட்கிறார் எனவே அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் அப்பொழுது கோபி வீட்டிற்கு வெளியில் நிற்க இனியா வீட்டிற்குள் அழைத்து வருகிறார். அவர் பழனிசாமி அங்கு வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சடைகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.