விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து எப்படியாவது பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ராதிகா இருந்து வருகிறார்.
அந்த வகையில் பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என ராதிகா நினைத்தாலும் கோபி ஒரு புறம் பாக்கியாவை நினைத்து பெருமைப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா பழனிசாமி உடன் நெருக்கமாக பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே பாக்யாவை சந்தித்து அவன் கூட எதுக்கு நெருக்கமாக பழகுற என கேட்க அதற்கு பாக்கியா அது என்னுடைய இஷ்டம் என்ன ஃபாலோ பண்ணாதீங்க என கூறிவிட்டு வந்து விடுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஆபீஸில் ராதிகா கேண்டிடுக்கு சென்று பாக்கியாவிடம் உங்கள யூனிபார்ம் போட்டுக்கிட்டு வர சொன்னேன்ல ஏன் போடல கேண்டின காலி பண்ணி தான் ஆகணும் காண்ட்ராக்டர் கேன்சல் பண்ண சொல்லிட்டு வேற டெண்டர் விட சொல்லட்டுமா. இங்க பாருங்க இப்பொழுதே சொல்லிட்டீங்கன்னா அதற்கான வேலையெல்லாம் நான் இப்போவே செய்ய ஆரம்பித்து விடுவேன் எனக் கூற அதற்கு பாக்கியா கொஞ்சம் இருங்க ஏன் மேடம் எப்ப பாத்தாலும் எல்லாத்துக்கும் அவசரப்படுறீங்க எனக் கூறுகிறார்.
நாளைக்கு வரையும் டைம் இருக்கேனா கொஞ்சம் பொறுமையா இருங்க என்ன கூற அதற்கு ராதிகா நாளைக்கு மட்டும் என்னாக போகுது பொறந்ததுல இருந்து புடவை கட்டிக்கிட்டு இருக்கீங்க என கூறுகிறார். பொறந்ததுல இருந்து நாங்க புடவை கட்டிக்கிட்டு இருந்தோமா அப்படி எல்லாம் கட்டி இருந்தா எங்களுக்கு உலக சாதனை படைச்சவனு சொல்லி கின்னஸ் சாதனை புக்குல எங்க பேரு வந்து இருக்கும் நாயெல்லாம் 16, 17 வயசுல தான் புடவையே கட்டுண என சாந்தி கூறுகிறார்.
பிறகு அக்கா நீ எப்ப புடவை கட்டுன எனக் கேட்க பாக்யாவும் நானும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் புடவையை கட்டுன அப்பனா நம்ப சேம் சேம் மேடம் மட்டும் பொறந்தபியே புடவை கட்டிக்கிட்டு பொறந்தவங்க போல என பாக்யாவிடம் சொல்லி சிரிக்க மொத்தமாக சேர்ந்து ராதிகாவை பங்கமாக கலாய்த்து விட்டார் செல்வி.