பாக்யாவை பழிவாங்க துடிக்கும் ராதிகா.! அடுத்த சிறப்பான சம்பவம் இனிமேல் தான் இருக்கு..

0
baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் சமீப காலங்களாக மிகவும் எதிர்பாராத எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மேலும் தற்பொழுது சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

அதாவது பாக்கியா ராதிகா வேலை செய்து வரும் கம்பெனியில் கேண்டின் நடத்தி வரும் நிலையில் எப்படியாவது பாக்யாவை அசிங்கப்படுத்த வேண்டும் என ராதிகா கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார். மேலும் பாக்கியாவை குடும்பத்தினர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து ஆடிவரும் நிலையில் கோபியும் பாக்கியாவின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்பட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடு ராதிகா கேண்டினுக்கு சென்று எல்லாம் ஒழுங்கா வேலை பார்க்கிறீர்களா முன்னாடி இருந்தவங்களா யூனிபார்ம் போட்டு வேலை செஞ்சாங்க அதனால யாரு வேலை செய்றவங்க என தனியாக தெரிந்தது ஆனால் நீங்களும் புடவை கட்டி இருப்பதனால் இங்கு கேண்டின் நடத்த வந்தீங்களா இல்ல எங்களோட வேலை செய்ய வந்தீங்களா என சரியாக தெரியவில்லை.

எனவே யூனிபார்ம் ஃபாலோ பண்ணுங்க என சொல்ல அதற்கு பாக்யா கண்டிப்பா நாங்க பண்றோம் எல்லாரும் ஒரே மாதிரியான புடவையில் வருவதாக கூற அதற்கு ராதிகா புடவை வேண்டாம் சல்வார் போட்டுக்கிட்டு வாங்க என கூற சல்வார்னா சுடிதார் அது எப்படி போட முடியும் நாங்கல்லாம் இதுவரையிலும் போட்டதே இல்லை என செல்வி கூறுகிறார்.

ஆனால் ராதிகா பிடிவாதமாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப வீட்டிற்கு வந்தவுடன் இதனைப் பற்றி ஜெனி எழிலிடம் பாக்யா கூற அதற்கு சுடிதார் தானே எங்க அம்மா கூட சுடிதார் போடுவாங்க என ஜெனி கூறுகிறார். அதே போல் எழிலும் அது எல்லாம் போட்டு அம்மா இப்பயெல்லாம் அது சாதாரண விஷயம் என சொல்ல செல்வியும் எனக்கும் சுடிதார் போடலாமுன்னு தோணுது என கூறுகிறார். இவ்வாறு இதற்கு மேல் பாக்கியாவால் சுடிதாரில் களமிறங்க போகிறார் இதனை பார்த்துவிட்டு கோபி எப்படி அதிர்ச்சடையப் போகிறார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.