விஜய் டிவியில் முக்கிய சீரியல்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தவரும் பிரபல நடிகை ஒருவர் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்த புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அமிர்தா, எழில் திருமணம் பல எதிர்ப்புகளுக்கு பிறகு நடந்து முடிந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் குடும்பத்தில் இருப்பவர்களும் அமிர்தாவை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் அம்மாவாக நடித்து வந்த நடிகை என்ட்ரி கொடுக்கிறார். இவர் வீட்டிற்கு வந்தவுடன் நிலாவை தூக்க ஈஸ்வரி யார் வந்தாலும் போயிடுவியா என கேட்க பிறகு நான் அமிர்தாவின் அம்மா எனக் கூறுகிறார்.
திருமணம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நடந்தது என கேள்விப்பட்டேன் என்னால் வர முடியவில்லை எனக் கூற பிறகு ஈஸ்வரியின் காலில் விழுந்து என் மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். அதற்கு ஈஸ்வரியும் எதற்கும் கவலைப்படாதீங்க நாங்க பார்த்துக் கொள்கிறோம் எனக் கூற அந்த நேரத்தில் அமிர்தாவிற்கு என்று சேர்த்து வைத்த நகைகளை கொடுக்கிறார்.

அதனை எழில் வாங்க மறுக்க பிறகு இது அமிர்தாவிற்காக சேர்த்து வைத்தது வைத்துக் கொள்ளுங்கள் என கூறி என்னுடைய மகளுக்கு வாழ்க்கை தந்ததுக்கு மிகவும் நன்றி இவ்வளவு பெரிய குடும்பத்தில் அவளுக்கு கல்யாணம் ஆனது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

இதனை அடுத்து மறுபுறம் ராதிகா தொடர்ந்து பாக்கியாவின் கேண்டினில் ஏதாவது குறை கண்டுபிடித்து மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது அனைவரையும் ஒரே மாதிரியான சுடிதார் போட்டு வரவேண்டும் என கூறியிருக்கிறார். எனவே இதனைப் பற்றி ஜெனி, எழிலிடம் கூற அவர்களும் பாக்யாவை சுடிதார் போட்டு போகுமாறு கூறுகிறார்கள்.