பாக்யாவை பழிவாங்க நினைத்து ஆபீஸில் அனைவர் முன்பும் அசிங்கப்பட்ட ராதிகா.! காதலரை வீட்டிற்கு அழைத்து சென்ற இனியா..

0
baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக டிஆர்பியில் முன்னணி வகித்துவரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது அடுத்தடுத்த சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் எப்படியாவது பாக்யா தன்னுடைய வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது முதன்முறையாக ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் அவருக்கு கேண்டின் நடத்துவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது.

இந்த கேண்டின் திறப்பு விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்பொழுது ராதிகா பாக்கியாவை சீண்டி பார்க்க பிறகும் மொக்கை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அதாவது இன்றைய எபிசோடில் இனியா தான் காதலித்து வரும் சரணை நண்பன் என பாக்யாவிடம் கூறிய நிலையில் பாக்கியாவும் அடுத்த நாள் சரணை வீட்டிற்கு சாப்பிட அழைத்துள்ளார்.

இனியாவும் சரணை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அப்பொழுது ஜெனி அவரை வரவேற்கிறார் பிறகு ஈஸ்வரி யார் அந்த பையன் எனக் கேட்க அதற்கு பாக்கியா இனியாவோட ஃப்ரெண்ட் அத்தை நான் தான் வர சொன்னதாக கூற சரணம் அந்த நேரத்தில் யார் இவங்க என கேட்க இவங்க தான் தன் பாட்டி எனக் கூற இவங்க பாட்டியா என்னால நம்பவே முடியவில்லை என சொல்ல ஈஸ்வரி சிரிக்கிறார்.

பிறகு பாக்யா பிரியாணி சாப்பிட வைக்க இனியா எப்படிமா இப்படி எல்லாம் மாறுன எனக் கேட்டுக் கொண்டிருக்க உன்னுடைய பிரண்டு தானே எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு நீ படிச்சு வேலைக்கு போனா மட்டும் போதும் எனவே நீ படிக்கிறதில்ல கவனம் செலுத்துமா எனக் கூறுகிறார். பிறகு இனியா யாரிடமும் சொல்லாமல் பாக்யா வீட்டிற்கு சென்ற நிலையில் ராதிகா இதனை வைத்து சண்டை போடுகிறார்.

மேலும் கோபியிடம் யாருமே என்னை மதிக்கிறது இல்லை இதற்கு மேல் இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது எனவும் சொல்கிறார். அடுத்த நாள் எப்படியாவது பாக்யாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக கேண்டினில் இருக்கும் சாப்பாடு நல்லா இல்லைன்னு ஈமெயில்ல சொல்றாங்க எனக் கூற அப்படியெல்லாம் கிடையாது அனைவருக்கும் சாப்பாடு பிடித்திருப்பதாக தான் சொல்வதாக பாக்யா கூறுகிறார். மேலும் ராதிகா இருப்பவர்களிடம் சாப்பாட்டை பற்றி கேட்க வீட்டு சாப்பாடு போல் மிகவும் அருமையாக இருப்பதாக சொல்ல பல்பு வாங்கிக் கொண்டு ராதிகா இருந்து கிளம்புகிறார்.