நான் தான் அவங்க மருமகனு ஒத்துக்கணும் ஏதாவது செய்யுங்க என்ன கோபியை புழிஞ்செடுக்கும் ராதிகா.! அசிங்கப்படுத்திய ராமமூர்த்தி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு படாத பாடு பட்டு வருகிறார் மேலும் தற்போது தான் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாக தொடங்கி இருக்கும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

அதாவது தற்பொழுது பாக்கியா கேண்டீன் திறப்பு விழாவை மிகவும் சிறப்பாக நடத்திய நிலையில் அந்த விழாவிற்கு யாரும் செல்லக்கூடாது என ராதிகா கூறினார் ஆனால் எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த குடும்பமும் பாக்யாவின் கேண்டின் திறப்பு விழாவிற்கு சென்றனர். மேலும் அங்கு பாக்கியா ரஞ்சித்திடம் பேசுவதை பார்த்த கோபிக்கு வயித்தெரிச்சலாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்தவுடன் ராதிகா பாக்யாவை நினைத்தால் உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா நான் உங்களுக்கு பொண்டாட்டி நான் உங்க அம்மா, அப்பாவுக்கு யார் மருமகத்தான ஆனா அவங்க என்ன ரொம்ப அசிங்கப்படுத்தறாங்க. நான் உங்கள எல்லாருக்கும் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுன கூட்டிட்டு ஓடலில என கேட்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நேரத்தில் ராமமூர்த்தி வீட்டிற்கு வர அப்போது இவன் பாக்கியாவிற்கு பண்ணது பச்ச துரோகமா நாங்க சாகுற வரைக்கும் அவ கூட தான் அம்மா நிப்போம் 25 வருஷமா அவ எங்க கூட இருந்திருக்கா இப்பவும் எங்களுக்கு ஒன்னுனா அவ துடிச்சு போயிடுவா. அவ எங்கள அம்மா அப்பாவைதான் நினைக்கிறாள் நாங்களும் அவளை மருமகளாக இல்ல மகளாக தான் நினைக்கிறோம்.

இவன் அவள நட்டாத்துல விட்டுட்டு வந்த மாதிரி நாங்களும் விட்டுட்டு வந்துட முடியாதுல என்னைக்கா இருந்தாலும் அவதான் மா எங்க மருமக அதுக்காக உன்ன நான் தப்பாவும் நினைக்கல தப்பாவும் பேசல உன்ன மருமகளா ஏத்துக்க முடியாதுமா அவ்வளவுதான் எனக் கூற அதற்கு ராதிகா அப்ப  ஏன் இந்த வீட்டில இருக்கீங்க என கேட்கிறார்.

இங்க இருக்கானு உன்ன மருமகளா ஏத்துக்கிட்டானு இல்ல என் பேத்திக்காக தான் இங்கே இருக்கிறேன் என கூறிவிட்டு இனியாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். அந்த நேரத்தில் மையும் செல்ல ராதிகா போகவிடாமல்‌ கையை பிடிக்கிறார். பிறகு கோபி அவங்களும் உன்ன ஏன் ஏத்துக்கணும்னு நினைக்கிற நான் உன்ன ஏத்துக்கிட்டால எனக் கூற அதற்கு ராதிகா அவங்க என்ன மருமகளா ஏத்துக்கணும் நீங்க தான் ஏத்துக்க வைக்கணும் என கோபியை படாத பாடு படுத்துகிறார்.