விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் கோபியின் நிலமை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அதாவது பாக்கியா மிகவும் சிறப்பாக ராதிகா வேலை செய்யும் ஆபீசில் கேண்டீன் திறந்திருக்கும் நிலையில் இதற்காக பலரும் வருகை தந்திருந்தனர். அதில் ராதிகா இந்த விழாவிற்கு போகக்கூடாது என நினைக்க ஆனால் ஆபிஸரின் தொல்லையினால் வருகிறார் மேலும் யாருமே இந்நிகழ்ச்சிக்கு போக போக கூடாது என நினைத்த நிலையில் ஆனால் அனைவருமே இந்நிகழ்ச்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த பிறகு ராதிகா கோபமாக உட்கார்ந்து இருக்க அந்த நேரத்தில் கோபி வந்து மகிழ்ச்சியாக பேச இதனால் கோபமடைந்த ராதிகா பாக்கியாவை நெனச்சா உங்களுக்கு பெருமையா இருக்கா உங்களுக்கு பொண்டாட்டி நான் உங்க அம்மாவுக்கு நான் யாரு என கேட்கிறார்.
வாங்க அத்தன்னு சொன்னதுக்கு உன்ன பாக்க வரல நான் என் மருமகளை பார்க்க வந்தேன் என அப்படி அவமானப் படுத்துறாங்க. உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியாமல் இழுத்துட்டு போய் ஒன்னும் கல்யாணம் பண்ணல என பேசிக்கொண்டு இருக்க அப்பொழுது கோபத்தில் ராதிகா கோபியின் கழுத்தை நெரிக்க போகிறார்.
பிறகு கோபி இருக்க இருக்க நிலைமை ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கு என தனக்குள் பேசிக்கொள்கிறார். மறுபுறம் பாக்கியா ஈஸ்வரிக்கு தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போவது தெரிந்து உள்ள நிலையில் அதனால் வீட்டிற்குள் வர பயப்படுகிறார். பிறகு ஈஸ்வரியை பார்த்ததும் பாக்கியா ஆபீஸில் ராதிகா இங்கிலீஷ் பேசி அவமானப்படுத்தியதை கூறுகிறார். எனவே ஈஸ்வரியும் நீ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போவதுனால எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம். அதுதான் தப்பு எனக்கூறி கோபப்பட இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.