விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாக்யா பல எதிர்ப்புகளுக்கு பிறகு கேண்டீன் ஒன்றை திறந்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது பாக்கியா ராதிகா பணியாற்றி வரும் கம்பெனியில் கேண்டின் திறந்துள்ளார் எனவே திறப்பு விழாவிற்காக தன்னுடைய குடும்பத்தினர்கள் மற்றும் தெரிந்த பலரும் வருகை தந்துள்ள நிலையில் வர முடியாது எனக் கூறிய ஈஸ்வரி தற்பொழுது வந்து விளக்கேற்றி திறந்து வைத்துள்ளார் இது பாக்யாவிற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனியா, கோபி இருவரையும் ராதிகா திறப்பு விழாவிற்கு செல்லக்கூடாது என்று கூறிய நிலையில் இனியா கோபியிடம் சண்டை போட்டு கேன்டின் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். எனவே கோபி தன்னுடைய நண்பரிடம் இனியா திறப்பு விழாவிற்கு சென்றது பிடிக்கவில்லை எனக் கூற அதற்கு அவருடைய நண்பர் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட பொழுது இனியா உன்னுடன் வரணும் சொல்லவே இல்லை எனக் கூறுகிறார்.
இதனை அடுத்து மறுபுறம் பாக்கியா அனைவரையும் சாப்பிட சொல்ல அப்பொழுது ராதிகாவை பார்த்து சாப்பிட கூப்பிடுகிறார். உங்களுக்கு நக்கலா என ராதிகா கேட்க அதற்கு பாக்யா நான் இந்த அளவிற்கு வந்துள்ளது உங்களுடைய உதவியினால் தான் நீங்கள் தான் முதன் முதலில் மிஷின் வாங்குவதற்காக பணம் கொடுத்தீர்கள் என பழைய நினைவுகளை மறக்காமல் கூறுகிறார்.
பிறகு சாப்பிட்டுவிட்டு ராதிகாவிடம் இங்கிலீஷ் பேசி ரோஸ் தர அதற்கு ராதிகா வேணும்னே என இன்சல்ட் பண்றீங்களா என கேட்க நீங்கதான பிசினஸ் செஞ்சா இங்கிலீஷ் தெரிஞ்சுக்கணும்னு சொன்னீங்க அதெல்லாம் நான் இங்கிலீஷ் கத்துகிட்டு வரேன் அத நீங்க தெரிஞ்சுக்கணும் என்பதற்காக தான் சொன்னேன் என கூறுகிறார்.