பாக்யாவை பற்றி பேசியதால் கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி.! காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை சென்ற இனியா..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது பாக்கியா அனைவரையும் தன்னுடைய திறமையினால் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இதனால் கோபி ராதிகாவிற்கு இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

அதாவது பாக்கியா ஆர்டர்கள் கிடைப்பதன் மூலம் தொடர்ந்து சம்பாதித்து வருகிறார் எனவே கோபிக்கு தர வேண்டிய 20 லட்சம் ரூபாய் பணத்தில் இரண்டு லட்ச ரூபாயை கொடுத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து ராதிகா பணிபுரியும் ஆபீசில் கேட்டரிங் செய்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இங்கிலீஷ் பேச தெரியவில்லை என ராதிகா பாக்கியாவை அசிங்கப்படுத்திய நிலையில் பிறகு இன்றைய எபிசோடில் எழிலிடம் பாக்கியா வேண்டும் என்றே என்னிடம் இங்கிலீஷில் பேசியதை அவமானப்படுத்திவிட்டார்.

எனவே நான் இங்கிலீஷ் கத்துக்கலாம்னு இருக்கேன் என கூற அதற்கு நான் சொல்லித் தரேன் என எழில் கூறுகிறார். ஆனால் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் நான் கிளாஸ் போறேன் என கூறுகிறார் எழிலும் சரி எனக் கூற மறுபுறம் இனியா தன்னுடைய புதிய டியூஷன் பிரண்டை காதலிக்க தொடங்கிய நிலையில் இருவரும் நடு ரோட்டில் ஜாலியாக பேசி வருகின்றனர்.

அப்பொழுது அந்த பையன் இனியாவிற்கு ப்ரபோஸ் செய்ய இன்னும் கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பேசி வருகிறார். இனியாகும் வெட்கப்பட எப்பொழுது வீட்டில் வசமாக மாட்டப் போகிறார் என்பது தெரியவில்லை. மறுபுறம் ராதிகா கோபியிடம் பாக்யாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டரை பற்றி கூற கோபி அதிர்ச்சி அடைந்து அவ என்னத்த செஞ்சு கிழிக்க போறான்னு தெரியல என கூறிவிட்டு பரவாயில்லை இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு என பெருமையாக பேசுகிறார்.

இதனால் கோபமடைந்த ராதிகா கோபியை டீ போட்டு தருமாறு சண்டை போட கோபியும் இதெல்லாம் உனக்கு தேவையா கோபி எனும் மைண்ட் வாய்ஸ்சில் பேசிக் கொள்கிறார். இவ்வாறு ராதிகா தற்போது கோபியின் மீது கடு கோபத்தில் இருந்து வருகிறார்.