விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 30/6/23 இன்றைய எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பதட்டமாக லிஸ்ட் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு வர இதனை பார்த்து பழனிச்சாமி பாக்கியா மேடம் என்ன ஆச்சு ஏன் பயமா இருக்கா என கேட்க ஆமாம் சார் எப்பவுமே ஒரு கல்யாணத்துக்கு சமைக்கிறதுக்கு போனா நல்லபடியா சமைக்கணும்னு தான் நினைப்பேன் ஆனா இன்னைக்கு பயமா இருக்கு உங்க பேர காப்பாத்தணும்னு தோணுது என சொல்ல பிறகு பழனிச்சாமி பயப்படாதீங்க கண்ணை மூடி மூன்று முறை மூச்சை இழுத்து விடுங்க எல்லாம் சரியாயிடும் எனக் கூற அதே போல் பாக்கியா செய்கிறார்.

எப்போதெல்லாம் பதட்டமாக இருக்கோ இதை யாருக்கும் தெரியாமல் செஞ்சுடுங்க என கூறிவிட்டு கிளம்பி விட மறுபுறம் கோபி ராதிகா இருவரும் காரில் பேசிக்கொண்டே வருகிறார்கள் அதாவது ராதிகா இப்படி எல்லாம் டிரைவ் போயி ரொம்ப நாளாச்சுல என்ன கேட்க அதற்கு ஆமாம் ராதிகா எனக்கு இந்த கூட்டம் பங்க்ஷன் இது எல்லாம் சுத்தமா பிடிக்காது நீயே நானும் மையூ நம்ம வீட்டிலேயே இருந்தா போதும் என சொல்ல அதற்கு ராதிகா எங்கேயோ போகாம இருக்க முடியுமா எனக் கேட்கிறார்.

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டே மண்டபத்திற்கு வர ரூமிற்கு சென்றவுடன் நம்ம இங்க எத்தனை நாள் இருக்க போறோம் என கேட்கிறார் அதற்கு நான்கு நாள் என ராதிகா சொல்ல அப்பனா நம்ம ரெண்டு பேரும் மட்டும் ஒரே ஜாலிதான் என்ன சொல்ல அதற்கு ராதிகா அப்படியெல்லாம் சொல்லாதீங்க அதெல்லாம் எதுவும் நடக்காது என கூற இப்படி சொன்னதுனால இதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு யோசிச்சு பாருங்க ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு கொடைக்கானல் போனப என்ன ஆச்சுன்னு கேட்க கண்ணன் மாமான்னு வந்தா இதெல்லாம் ஞாபகம் படுத்தாத என கூறுகிறார்.

பிறகு இனிமேல் இந்த பாக்யா தொல்லை இல்லாமல் இருக்கணும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் மறுபுறம் பாக்கியா அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு சமைப்பதற்கான வேலைகளை பார்த்து வருகிறார்கள். அப்பொழுது செல்வி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க பாக்கியா பேசுனது போதும் வேலையை பாரு என கூறிவிடுகிறார்.

இதனை அடுத்து பழனிசாமி பாலாஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாலாஜி பழனிசாமியிடம் பொண்ணு பார்க்க போனியே என்ன ஆச்சு எப்ப கல்யாண சாப்பாடு என கேட்க அத பத்தி எல்லாம் பேசாத என இவ்வாறு ஜாலியாக பேசிக் கொண்டிருக்க எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னா யாரு கேக்குறாங்க எல்லாரும் கல்யாணம் எப்ப எப்பனு கேட்டுக்கிட்டே இருக்காங்க எனக்கு அது எல்லாம் வேண்டாம் என கூறுகிறார்.

இவ்வாறு பாலாஜி பழனிச்சாமி இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார். பழனிச்சாமி தானா இது என பார்க்க இந்த லாம்ப் போஸ்ட் இங்கேயும் வந்துட்டானா என கூறிவிட்டு கோபமாக பழனிச்சாமி பக்கத்தில் வருகிறார். அப்பொழுது கோபி சார் வாங்க நீங்க இங்கு தான் தங்கி இருக்கீங்களா என கேட்க பிறகு பாலாஜியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கோபி திடீரென கிளம்பு விடுகிறார் யாருப்பா இது என பழனிச்சாமியிடம் பாலாஜி கேட்க என்னோட பிரண்டுக்கு கொஞ்ச நாள் புருஷனா இருந்தாரு அதான் அவங்களுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சு அத பத்தி நோண்டாத எனக் கூற இதோடு எபிசோடு நிறைவடைகிறது.