பாண்டிச்சேரியில் ராதிகா பாக்யாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.! மாலினி வளையில் சிக்கிக் கொண்டு குடித்து சின்னா பின்னமாகும் செழியன்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் செழியன் மாலினியிடம் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில்  மாலினி உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என கூறுகிறார்‌ அதற்கு செழியன் இது ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு நான் கல்யாணம் ஆனவன் எனக்கு இனிமேல் குழந்தையும் பிறக்கப் போகுது என கூற இதனை நூறு முறை சொல்லி இருப்பீங்க நான் இப்ப என்ன உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேனா சொல்றேன் இல்ல என் கூடவே வந்துடுங்கன்னு  சொல்றேனா உங்களுக்கு புடிச்சிருக்கு தானே சொல்றேன் என சொல்ல செழியன் அதிர்ச்சடைகிறார்.

இதனை அடுத்து ராதிகா மையூவிற்கு சொல்லித் தந்து கொண்டிருக்க கோபி டின்னர் சாப்பிடலாம் என சொல்ல அதற்கு ராதிகா ஹோட்டல் ரூம்ல இருக்கிற மாதிரி இருக்கு சாப்பிடுவதும் இங்கே எல்லாமே இங்கே தான் வெளியிலேயே போக முடியல என கூற அதற்கு என்ன பண்றது அங்க தான் போனாவே சண்டை வருதுல்ல என சொல்கிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா போன் செய்து பாண்டிச்சேரி கல்யாணம் ஞாபகம் இருக்கா என கேட்க ஆமா நான் மறந்துட்டேன் என கூறிவிட்டு கோபியிடம் பாண்டிச்சேரி கல்யாணத்துக்கு போக வேண்டும் மூன்று நாளைக்கு திருமணம் நடக்கும் என சொல்ல என்னால் வர முடியாது என கோபி கூறுகிறார்.

பிறகு 3 நாளைக்கு இந்த பாக்யாவின் முகத்தை பார்க்காமல் சந்தோஷமா இருக்கணும் எனக் கூற என்னைக்கு போக வேண்டும் என கோபி கேட்கிறார் நாளைக்கு காலையில் போக வேண்டும் என சொல்ல நாளைக்கு போறத இப்ப வந்து சொன்னா நான் எப்படி மேனேஜ் பண்ணுவேன் நிறைய வேலை இருக்கிறது என சொல்ல நான் மறந்துட்டேன்னு சொல்றல கோபி என ராதிகா சொல்கிறார்.

பிறகு கோபி பாண்டிச்சேரி போக ஒத்துக் கொள்கிறார் இதனை அடுத்து பாக்யா வர இனியா இன்னைக்கு ஆளையே காணும் அப்பப்ப வந்து ஏதாச்சும்  வேணுமான்னு கேட்டுகிட்டே இருப்ப என சொல்ல எழில் ஆர்டர் பத்தி யோசிச்சிகிட்டு இருக்கியா மா என கேட்கிறார். அதற்குள்ள செல்வி சொல்லிட்டாளா என சொல்ல ஆர்டர் மட்டும் தான் சொன்னாங்க என்னனு சரியா சொல்லல என எழில் கூற பிறகு பாண்டிச்சேரியில் மூன்று வேலைக்கும் மூன்று நாளைக்கு ஆர்டர் இருக்கு என சொல்ல எழில் சந்தோஷப்படுகிறார்.

பிறகு இனியாவும் நீ இல்லன்னு கஷ்டமா தான் இருக்கும் இருந்தாலும் நான் நல்லபடியா எக்ஸாம் எழுதிடுவேன் என கூற பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். இதனை அடுத்து மாலினி செழியனிடம் என் கிட்ட எல்லாரும் பணத்துக்காக தான் பழகுறாங்க எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது அப்பா இருந்தும் அவரு கண்டுக்கல எனக்காக நீங்க மட்டும் தான் இருக்கீங்க எனக் கூற செழியன் குடிக்க ஆரம்பிக்கிறார். மாலினி என்ன விட்டுடாத எனக்கு நீ மட்டும் தான் இருக்க எனக் கூற போதையில் நான் இப்ப பேசுற நிலைமையில் இல்லை கிளம்புறேன் எனக் கூறிவிட்டு வீட்டிற்கு வருகிறான்.

கதவை தட்ட பாக்கியா வந்து கதவை திறக்க செழியன் குடித்திருப்பது தெரிய வருகிறது நல்ல வேலை நல்ல சம்பளம் நல்ல மனைவி ஏண்டா இப்படி குடிக்கிற எனக் கூற பிறகு சத்தியம் கேட்கிறார். செழியன் அழுக பிறகு பாக்கியா அனுப்பி வைக்கிறார். இதனை அடுத்து கோபி ராதிகா பாண்டிச்சேரி திருமணத்திற்கு கிளம்ப அதே  திருமணத்திற்கு சமைத்து தருவதற்காக பாக்யா கிளம்புகிறார் எனவே பாக்யா சாமி கும்பிட்டு விட்டு தனது மாமனார் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.