ஈஸ்வரி பாக்கியா கண் முன்னே ராதிகாவிடம் பூரி கட்டையால் அடி வாங்கிய கோபி.! பாக்கியா லக்ஷ்மி சீரியல் இன்றைய எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமி வீட்டிற்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு இருவரும் கோபி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாக்யா பழனிச்சாமியிடம் மனிப்பி கேட்க அவர் ஏதாவது திட்டினாரா என கேட்கிறார் இல்லை உங்க கிட்ட பேச கூடாது உங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு தான் சொன்னாரு என சொல்கிறார்.

அதற்கு இப்பொழுதுதான் எந்த உரிமையும் இல்லாமல் போய்விட்டது அதன் பிறகும் எதற்கு இப்படி பண்றாருன்னு தெரியல என கேட்க பழனிச்சாமி உங்கள் மேல் இருக்கும் காதல்தான் எனக் கூறுகிறார். அதற்கு பாக்கியா சிரித்து விட்டு செழியன் பிறக்கும் பொழுது அவனுக்காக ஒரு பொம்மை வாங்கினோம் ரொம்ப நாளா ஒரே இடத்தில் தான் இருந்தது அதனை ஒரு நாள் பரணை மேல தூக்கி போட்டுட்டேன் அப்பொழுதுதான் அனைவரும் அந்த பொம்மை எங்கே என கேட்டார்கள்.

அப்படிதான் நானும் இதுவரையிலும் என் மேல் அவருக்கு காதல் இருந்ததே கிடையாது இடியட், முட்டாள், அறிவில்லையா என இது போன்ற வார்த்தைகளை சொல்லி தான் திட்டி இருக்காரு என கூறுகிறார். மறுபுறம் அமிர்தா தனது மாமனார் மாமியாரிடம் போனில் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது தனது மாமனாருக்கு அடிப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.

எனவே கண்கலங்க இந்த நேரத்தில் எழில் வருகிறார் என்ன ஆனது என கேட்க இதுபோன்று அப்பாவுக்கு அடிப்பட்டு விட்டதாம் என சொல்ல பாக்க போகலாம் என அமிர்தாவை கிளம்ப சொல்கிறார் அமிர்தாவும் மகிழ்ச்சியடைகிறார். கிச்சனில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க அப்பொழுது செல்வி இன்னைக்கு ஒரு ஃபங்ஷன் இருக்கிறது எனவே நான் சீக்கிரம் போகட்டுமா அக்கா என கேட்க இதனை காதில் கேட்ட ஈஸ்வரி ஏன் பாக்யா கிட்ட மட்டும் தான் கேட்பியா என்கிட்ட கேட்க மாட்டியா என கேட்கிறார்.

அதற்கு செல்வி அம்மா நான் மதியம் ஃபங்ஷன் போகணும் எனவே சீக்கிரம் போகட்டுமா என கேட்க அதற்கு இங்கு இருந்தா மட்டும் நின்னுகிட்டு கதை பேசிக்கொண்டு தான் இருப்ப வேலையா செய்யப் போற கிளம்பு கிளம்பு என்னை சிரித்துக்கொண்டே கூறுகிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகா கிச்சனுக்கு வந்து பால் சுட வைக்கிறார். அப்பொழுது வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி பாக்யாவிடம் இன்னைக்கு என்ன சமைக்கிற பாக்யா என கேட்க சிக்கன் என சொல்கிறார்.

ஆமா இல்ல நான் மறந்துட்டேன் நீ சிக்கன் குழம்பு வச்சா கோபிக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்ல ராதிகா கோபமடைகிறார். நான் உங்க மகனுக்கு சமைத்தே தரவில்லை என சொல்ல வரீங்களா என கேட்க ஆமாம் ரெடிமேட் சப்பாத்தியும் ஒரே குருமாவும் தான் என கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி கிச்சனுக்கு வருகிறார். நான் மாடியில் தான் போன் பேசிக்கொண்டு இருந்தேன் சிக்கன் வாசம் என்னை இங்கே இழுத்துட்டு வந்துடுச்சு ராதிகா பேபி எனக்காக நீ சிக்கன் குழம்பு வச்சிருக்கியா எனக்கு இது ரொம்ப பிடிக்கும் என்று உனக்கு தெரியுமா எனக் கேட்க அப்பொழுது செல்வி இது பாக்கியா அக்கா வச்ச குழம்பு சார் என சொல்கிறார்.

பதறி போய் கோபி கிச்சனிலிருந்து ஓடி விடுகிறார் இந்த நேரத்தில் ஈஸ்வரி பார்க்க பாவமா தான் இருக்கு ஆனா பண்ணின தப்புக்கு நல்லா அனுபவிக்கட்டும் என சொல்லிவிட்டு இவரும் கிளம்ப ராதிகா பாக்கியாவையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா ஏதோ சொல்லணும்னு நினைக்கிறீங்க சொல்லுங்க எனக் கேட்கிறார். அப்பொழுது ராதிகா அவருக்கு புடிச்ச காபி போட்டீங்க இப்ப சிக்கன் குழம்பு வச்சு இருக்கீங்க என கேட்க அத உங்க ஹஸ்பண்ட் கிட்ட போய் சொல்லுங்க என கூறுகிறார்.

அவர் உங்களுக்கு மேல இருக்கிறார் உங்களுக்கு தான் கல்யாணம் நினைச்சு கவலைப்படுறாரு உங்களுக்கு கல்யாணம் இல்லைன்னு தெரிஞ்சதும் சந்தோஷப்படுறாரு எனக் கூற  நீங்க ஏன் இவ்வளவு வெகுளியாக இருக்கீங்க என பாக்கியா கேட்கிறார். அதற்கு ராதிகா என்ன சொல்றீங்க நான் வெகுலியா எனக் கேட்க ஆமாம் உங்க ஹஸ்பண்ட அவங்களுக்கு சம்பந்தமில்லாத பொண்ண பத்தி ஏன் யோசிக்கிறாரு அவங்க என்ன பண்ணுனா இவங்களுக்கு என்ன கேட்க நான் என்னோட லைஃப்ல இப்பொழுதுதான் கேட்டரிங் பிசினஸ்ல நல்லா உயர்ந்துகிட்டு வரேன் எனவே நான் என்னுடைய குறிக்கோளை நெனச்சு போய்க் கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் எனக்கு புடிச்சவங்க கொஞ்சம் பேரு இருக்காங்க நான் இன்னும் உயர வேண்டும் என நினைக்கிறேன் என்ன வேணானு வெறுக்குறவுங்களை நான் ஏன் மாத்த முயற்சிக்கணும் உங்க ஹஸ்பண்ட் கிட்ட போயி வேற ஒரு பொண்ணு விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு சொல்லுங்க எனக் கூற ராதிகாவும் செல்கிறார். அப்பொழுது கோபியிடம் நான் உங்களுக்கு சமச்சி தரவில்லையா எனக் கேட்க பிறகு கிள்ளுகிறார் கோபி வலிப்பதாக கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.