விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியிடம் எதற்கு பழனிச்சாமிக்கலாம் நீங்க பொண்ணு பாக்குறீங்க நீங்களும் இப்படி இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை எனக் கூற அதற்கு ஈஸ்வரி பழனிச்சாமி நல்ல பையன் என கூறுகிறார்.
மேலும் மூணு வீடு, கோயம்புத்தூரில் நிறைய சொத்து என ஏகப்பட்டது இருப்பதாக கூற அதற்கு கோபி என்னுடைய பிசினஸ் டல்லா போயிட்டு இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல நானும் பெரிய ஆளாகலாம் பங்களா மாறி வீடு கட்டலாம் என கூறுகிறார். இதனை அடுத்து நான் ராதிகாவை கல்யாணம் செய்யும் பொழுது மட்டும் மூன்று பிள்ளைகள் இருக்கும் பொழுது உனக்கு என்ன கல்யாணம் என கேட்டீங்கள இப்பொழுது மட்டும் அவர்களுக்கு குழந்தை இல்லையா என கேட்கிறார்.
இதற்கு ஈஸ்வரி பழனிச்சாமிக்கு குழந்தை இல்லை எனவும் சந்திராவும் நல்ல படிச்ச பொண்ணு அப்பாவோட தூரத்து சொந்தம் எனக் கூறியவுடன் சந்திராவா அப்படின்னா யார் என கோபி கேட்கிறார். சந்திரான யாருன்னு உனக்கு தெரியாதா பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்தவங்க தான் எனக் கூற அப்பனா பழனிச்சாமிக்கும் சந்திராவுக்கும் தான் கல்யாணமா எனக் கூறியவுடன் மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும் பினான்சியல்லா உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளுங்க நானே கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்துறேன் என சொல்லிவிட்டு ரொம்ப சந்தோஷம் எனக் கிளம்புகிறார் ஈஸ்வரி செழியன் இருவரும் புரியாமல் என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறானே என்னை யோசிக்கிறார்கள். பிறகு கோபி பழனிச்சாமி சந்திராவை தான் கல்யாணம் பண்ணிக்க போறான் நம்ம ஆள கிடையாது நம்ம ஆளு எஸ்கேப் எனக்கூறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சி அடைகிறார்.
ரூமிற்கு சென்றவுடன் கோபி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ராதிகா என்ன கோபி இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க என கேட்க நீ எதா இருந்தாலும் கண்டுபிடிச்ச விடுற ராதிகா என சொல்லிவிட்டு பழனிச்சாமி சந்திராவை பொண்ணு பார்க்க வந்த விஷயத்தைப் பற்றி கூற பிறகு ராதிகா மயூவை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு பாக்கியா என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன நேத்திக்கு எங்க கூட பங்ஷனுக்கு வந்தீங்க அப்பொழுது பாக்கியாவை தான் பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்தாரு நினைச்சுகிட்டு புலம்பிக்கொண்டே இருந்தீங்க சரியா தூங்க கூட இல்ல இப்பொழுது பழனிச்சாமி பாக்கியாவை பொண்ணு பார்க்க வரலைன்னு தெரிஞ்சதும் எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க மூஞ்சில அவ்வளவு சிரிப்பு அப்ப நான் எதுக்கு என கேட்க், கோபி நீ தான் எனக்கு முக்கியம் என சொல்ல வர நீங்க இது தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் போதும் கோபி என கூறிவிட்டு கிளம்பி விடுகிறார்.
இதெல்லாம் உனக்கு தேவையா அவ்வளவு உனக்கு என்ன சந்தோஷம் என கோபி தன்னையே திட்டிக் கொள்கிறார். இதனை அடுத்து செழியன் சோகமாக இருக்க ஜெனி என்னன்னு கேட்கிறார் தலை வலிப்பதாக கூற சாப்பாடு இல்ல பால் ஏதாவது எடுத்துட்டு வரேன் என சொல்கிறார். ஆனால் செழியன் எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டு நீ என்ன பண்ண போற என கேட்க நான் பகலில் நல்லா தூங்கி விட்டேன் இப்பொழுது புக் படிக்க போறேன் என் சொல்ல பிறகு செழியன் படுத்துக் கொள்ள ஜெனி அவருடைய தலையை கோதிக் கொண்டிருக்க செழியன் ஐ லவ் யூ என கூறுகிறார்.
இவ்வாறு மாறி மாறி பார்த்துக் கொள்ள பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரி இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறார்கள். அப்பொழுது எழில் எங்கு கோவிலுக்கு பொய்ட்டு வரிங்களா என கேட்க ஆமாம் இனியாவிற்கு எக்ஸாம் வருதில்ல நல்லபடியா பாஸ் ஆகணும் நியூஸ் பேப்பர்ல அவளுடைய போட்டோ வரணும் என மனசார வேண்டிக்கிட்டு வந்ததாக சொல்ல இனியா கண்டிப்பாக உங்க கூட சேர்ந்து நான் போட்டோவுக்கு போஸ் கொடுத்து என் சொல்கிறார்.
பிறகு இனியா ரூமுக்கு சென்று படிக்க பாக்யா பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருடைய அம்மாவிற்காக மதிய உணவு சமைத்து தர பழனிச்சாமியை அம்மா அழைக்கிறார். பிறகு பழனிச்சாமியின் அக்காவிடம் அம்மா பேசுவதற்காக சென்றுவிட பாக்யா மன்னிப்பு கேட்கிறார். இனியவோட அப்பா வந்தது எனக்கு தெரியும் ரொம்ப திட்டிட்டாரா என கேட்க அப்படி எல்லாம் கிடையாது உங்க கிட்ட பேசக்கூடாது உங்க வீட்டுக்கு வரக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார் என சொல்ல இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.