விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி பாக்யாவிடம் பேசக்கூடாது என்பதற்காக கோபி பழனிச்சாமியின் வீட்டிற்கு தேடி செல்கிறார். அங்கு சென்று பாக்யாவுடன் சிரித்து சிரித்து பேசுவது பழகுவது இதெல்லாம் வச்சிக்க கூடாது அவ என்னுடைய பொண்டாட்டி என கோபி கூர அதற்கு பழனிச்சாமி நான் பாக்யா மேடத்திடம் பேச கூடாதுன்னு அவங்க தான் சொல்லணும் நீங்க சொல்லக்கூடாது எனக் கூற நீங்க உங்க வேலைய பாருங்க என சொல்வதற்கு இங்கிலீஷில் என்ன என கோபியிடம் பழனிசாமி கேட்கிறார்.
அதற்கு கோபியும் மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் என்ன சொல்ல இதையே நீங்க உங்க வேலைய பாருங்க என மறுபடியும் பழனிச்சாமி கூறி கோபியை அசிங்கப்படுத்துகிறார். பிறகு கோபி பழனிச்சாமியின் வீட்டிலிருந்து புலம்பிக்கொண்டே வெளியில் வர எழிலும் அந்த நேரத்தில் வருகிறார்.
நீங்க இங்க என்ன பண்றீங்க என எழில் கேட்க நீங்க கேட்க வேண்டியதை எல்லாத்தையும் நான் பழனிச்சாமியிடம் கேட்டு விட்டேன் என்ன சொல்கிறார். எதை பத்தி என கேட்க அதற்கு பாக்யாவை பொண்ணு பார்க்க வந்தது பற்றி தான் எனக் சொல்கிறார். அதற்கு எழிலும் நீங்க அம்மாவை எதற்கு டிவோர்ஸ் செஞ்சீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தானே அதே போல் அம்மாவும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு.
நான் அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவேன் அவங்கள மதிக்குவேன் எனவே அவங்க இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு சந்தோசம் தான் எனக் கூற கோபி அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து எழில் பழனிச்சாமியிடம் கோபி இப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார் ஆனால் பழனிச்சாமி பரவாயில்ல அதனால் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறிவிடுகிறார்.
இதனை அடுத்து பழனிச்சாமி எழில் இருவரும் கிளம்பி விடுகிறார்கள் பிறகு வீட்டிற்கு வந்த எழில் தான் போன காரியம் நிறைவேறி விடும் என நினைப்பதாக சொல்ல அந்த நேரத்தில் பாக்யாவிடம் அந்த ஆள நான் பழனிச்சாமி சார் வீட்டில பார்த்தேன் என கூறுகிறார். அதற்கு பாக்யா யார் என கேட்க அதான் அந்த கோபியை தான் என சொல்கிறார் அவர் எதற்காக வந்தார் என பாக்யா கேட்கிறார்.
நேத்தி பழனிச்சாமி சார் இங்க வந்தாங்கள அவரு உன்ன தான் பொண்ணு பாக்க வந்தாருன்னு அவரு நினைச்சு கேட்டாரு என கூற ஐயோ நான் இனிமே எப்படி பழனிசாமி சார்ட்ட பேசுவேன் என புலம்புகிறார். அதற்கு செல்வி சும்மாவா விட்டீங்க நறுக்குனு நாலு கேள்வி கேட்க வேண்டியதுதானே என சொல்கிறார். எழிலும் நான் கேட்டதாக கூற பிறகு எழில் பாக்யாவிடம் நாம ஏன் பழனிசாமி சாருக்கு அங்க இங்கனு பொண்ணு தேடணும் உனக்கு பிடிச்சிருந்தா சொல்லுமா நீ கல்யாணம் பண்ணிக்கலாம் என கூற எழிலை பளார் என்று அறைந்து விடுகிறார்.
என்ன பேசுற ரொம்ப தப்பா பேசுற என்ன கூறி திட்டி அடிக்க அதற்கு தெரியாமல் சொல்லிவிட்டதாக எழில் மன்னிப்பு கேட்டாலும் அதனை பாக்கியா ஏற்றுக்கொள்ளாமல் சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி அமர்ந்திருக்க இந்த நேரத்தில் செழியன் வருகிறார். செழியனின் போன் அடிக்க எடுக்க வேண்டியதுதானே என ஈஸ்வரி சொல்கிறார். அதற்கு தெரிஞ்ச ஒருத்தன் தேவையில்லாம மெசேஜ் பண்ணிக்கிட்டே இருக்கா என சொல்ல இந்த நேரத்தில் கோபியும் வந்து விடுகிறார் தலையில் கையை வைத்துக்கொண்டு அதிகம் தலை வலிப்பதாக சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி காபி போட்டுட்டு வரட்டாப்பா என கேட்க கோபி காபி குடிச்சா சரியாகுற தலைவலி கிடையாது அப்பா எதற்கு தேவையில்லாம அந்த பனை மரத்துக்கு பொண்ணு பாக்குறாரு என சொல்ல பண மரமா அப்படி என்றால் யார் என கேட்கிறார் ஈஸ்வரி. அதற்கு செழியன் பழனிசாமி சார தான் சொல்வதாக கூற உடனே அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பி என ஈஸ்வரி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.