விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பாக்யாவிற்கு திருமணம் நடக்கப் போவதாகவும் பழனிசாமியை தான் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறும் நிலையில் ராதிகா நம்பாமல் என்ன சொல்றீங்க கோபி என கேட்கிறார். ஆமாம் பழனிச்சாமியும் அவங்க அம்மாவும் இன்னைக்கு தான் பாக்கியாவை பொண்ணு பார்ப்பதற்காக வந்தாங்க என சொல்ல அதற்கு ராதிகா சிரிச்சு கிட்டு என்ன குடிச்சு இருக்கீங்களா என கேட்கிறார்.
நான் குடிச்சிருக்கேனா என கேட்க அதன் பிறகு என்னுடைய அப்பா வேற நான் சம்பதியாக போறேன் என சொல்லி ரொம்ப பீீத்தீக்கிறாரு என சொல்கிறார் அதற்கு ராதிகா என்னால் நம்பவே முடியவில்லை எனக் சொல்ல கோபியும் முதலில் எந்நாளும் நம்ப முடியவில்லை தான் என கூறுகிறார் அதற்கு ராதிகா பாக்யா அப்படிப்பட்ட ஆளே கிடையாது இரண்டாவது திருமணத்தைப் பற்றி கொஞ்சம் கூட யோசித்து இருக்கவே மாட்டாங்க வேலை செய்ற இடத்துல கூட யாருகிட்டயும் பேச மாட்டாங்க என கூறிவிட்டு திடீரென எனக்கு ஒரு டவுட் கோபி பாக்கியாவிற்கு திருமணம் நடந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை இன்னும் அவங்க மேல பாசம் இருக்கிறதா என கேட்க அப்படியெல்லாம் இல்லை உன் மேல மட்டும் தான் பாசம் இருக்கிறது என சமாளித்து விட்டு தூங்கலாம் என கூறுகிறார்.
தூங்கும் நேரத்தில் கோபியின் கனவில பாக்கியா அழகாக புது மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்டு பழனிச்சாமிக்கு காபி கொடுக்க திடீரென கோபி முழித்துக் கொள்கிறார். பிறகு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கிச்சனுக்கு தண்ணி எடுக்கலாம் என செல்ல அங்கு இனியா, பாக்யா இருவரும் தூங்கி கொண்டிருக்கிறார்கள்.
பாக்யாவை பார்த்த கோபி தலை நிறைய பூ வச்சுக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு பட்டு புடவை எல்லாம் கட்டிக்கிட்டு நல்லா மோகினி பிசாசு மாதிரி தூங்குற நான் எப்படா போவனு காத்துகிட்டு இருந்த மாதிரியே ஹேர் ஸ்டைல மாத்துன, டியூஷன் கிளாஸ் போன, வண்டி ஓட்ட கத்துக்கிட்ட இப்ப சின்ன பொண்ணு மாதிரி டிரஸ்சும் பண்ற நான் டிவோர்ஸ் பண்ணதும் என்ன வில்லன் மாதிரியும் உன்னை ஹீரோயின் மாதிரி பார்த்தாங்க என கூறி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியா எழுந்து கத்த பிறகு கோபி அமையா இரு நான் தான் கோபி தண்ணி பிடிப்பதற்காக வந்தேன் என சொல்ல அதற்கு இங்கேயா தண்ணி இருக்கு கிச்சன்ல தான இருக்கு போங்க என கூறி வருகிறார்.
ரூமிற்கு செல்ல ராதிகா முழித்துக் கொண்டிருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைய பிறகு உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஆஃபீஸில் தான் பிரச்சனை என சொல்கிறார் இல்லை உங்களுக்கு பாக்யாவை பழனிசாமி பொண்ணு பார்க்க வந்தது பிடிக்கவில்லை நீங்க மட்டும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம் பாக்கியா மட்டும் பண்ணிக்க கூடாதா இன்னும் அவங்க மேல உங்களுக்கு அன்பு இருக்கு தானே என சொல்ல அப்படி எலலாம் கிடையாது உன்மேல் தான் நிறைய பாசம் இருக்கிறது அனுமன் மாதிரி என்னுடைய நெஞ்சை கிழித்து காண்பித்தாலும் உன்னுடைய பெயர் தான் இருக்கும் என கூறிவிட்டு படுத்துக் கொள்கின்றனர்.
காலையில் எழுந்தவுடன் எழில் கிச்சனுக்கு வர அமிர்தாவிடம் காபி கேட்கிறார் அதற்கு பாக்கியா ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குது என நெஞ்சை பிடித்த பிடித்து கிட்டு உட்கார்ந்து இருக்க அனைவரும் பதட்டமடைகிறார்கள் பிறகு இத்தனை நாளா என்னுடைய பையன் என்கிட்ட தான் காபி கேட்டான் இப்ப அவனோட பொண்டாட்டி கிட்ட கேட்க்குறா என கிண்டல் செய்கிறார்.
பிறகு எழில் ழனிச்சாமி சாரை பார்க்க போவதாக கிளம்புகிறார். இதனை அடுத்து கோபியும் பழனிச்சாமியை பார்ப்பதற்காக செல்கிறார் காரில் இறங்கியவுடன் பழனிச்சாமி உனக்கு ஒரு வழி பண்ண போறேன் என கூறிவிட்டு உள்ளே செல்ல பௌன்சர்கள் கோபியை தடுத்து நிறுத்த அதிர்ச்சடைகிறார். கோபி பழனிசாமியை பார்க்க வேண்டும் என சொல்ல உள்ளே சென்றவுடன் பழனிச்சாமி உட்காருங்கள் என கூறிவிட்டு காபி கொடுக்க சொல்கிறார்.
பிறகு கோபி நீங்க எதற்கு என்னுடைய பொண்டாட்டி கிட்ட பேசிக்கிட்டே இருக்கீங்க சூப்பர் மார்க்கெட்ல நின்னு சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க அங்க எங்கேயும் பேசிக்கிட்டே இருக்கீங்க என சொல்ல சார் எனக்கு புரியல உங்களுடைய பொண்டாட்டி யார்? எனக்கு கேட்கிறார். என் வைஃப் பாக்யாவை தான் சொல்றேன் என கோபி கூற அது எப்படி சார் நியாயம் நீங்க தான் விவாகரத்து செஞ்சிட்டிங்கள அப்பனா உங்களுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தானே என சொல்ல பிறகு அவங்க என்னுடைய கிளாஸ்மேட் என்னோட ஃப்ரெண்ட் அப்பன்னா நாங்க பேசுவேன் நீங்க உங்க வேலைய பாருங்க எனக் இங்கிலீஷில் சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.