விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியை பொண்ணு பார்ப்பதற்காக ராமசாமியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் வந்து ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பழனிசாமி மற்றும் அவருடைய அம்மா இருவரும் வருகிறார்கள்.
பழனிசாமி வெட்கப்பட்டு கொண்டு வீட்டிற்கு வெளியே நின்று கொள்ள எழில் அழைத்து வருகிறார். பிறகு பழனிசாமி வெக்கப்படுவதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர் அதற்கு பழனிசாமியின் அம்மா இரண்டு முறை பொண்ணு பார்ப்பதற்காக சென்றிருந்தோம் அங்கு இவன் பேசிப்பேசியே அந்த பொண்ணு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிடுச்சு என கூறுகிறார்.
பிறகு பாக்கியா சென்று பெண் மற்றும் அவருடைய அம்மா, அப்பாவை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்ல அந்தப் பொண்ணுடன் தனியா பேச வேண்டுமா என பழனிசாமிடம் கேட்க அதற்கு ஆமாம் என கூறுகிறார் ஆனால் அவருடைய அம்மா மிரட்டுகிறார். பிறகு அந்தப் பெண் நான் பேச வேண்டுமே எனக் கூறிவிட்டு பழனிசாமியை ரூமுக்கு அழைத்து செல்கிறார்.
இவர் இருவரும் பேசிக் கொண்டிருக்க மறுபுறம் கோபி ராதிகா மையூ மூன்று பேரும் காரில் போய்க்கொண்டிருக்க கோபி மிகவும் டென்ஷனாக இருக்கிறார். இதனை பார்த்த ராதிகா என்ன கோபி இன்னும் டென்ஷனா இருக்கீங்க ஆஃபீஸ் வேலை நினைத்து இப்படி இருக்கீங்களா என கேட்க ஆமா ரொம்ப டென்ஷனா இருக்கு நானே நினைக்கவில்லை என்றாலும் மண்ட மேல ஏறி நின்னுக்குது என கூறுகிறார்.
இதனை எடுத்து ராதிகா இன்னைக்கு பொண்ணு பாக்குற ஃபங்ஷன் முடிந்திருக்கும் அவங்க கல்யாணத்துக்கு நம்ம மூணு பேரும் போகலாம் என கூற முடிவே பண்ணிட்டீங்களா என்ன கோபி காரை நிறுத்துகிறார். இந்த கன்றாவி உனக்கு முன்னாடியே தெரிஞ்சு போச்சா உனக்கு இதுல எதுவுமே பிரச்சினை இல்லையா என கேட்க அதற்கு கூல்லாக ராதிகா எனக்கு என்ன பிரச்சனை இருக்கு அவங்க கல்யாணம் பண்ணிக்கட்டும் என கூறுகிறார்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்க பிறகு ராதிகா மையூ இருவரும் கிப்ட் வாங்குவதற்காக காரில் இருந்து இறங்குகின்றனர் அப்பொழுது கோபி அடப்பாவி அங்கு நான் இருந்திருந்தால் ஏதாச்சும் பிளான் பண்ணி நிப்பாட்டி இருக்கலாம் இங்க வந்து இவ கூட வெந்து சாக வேண்டியது இருக்கு என்ன நடக்குதோ என கூறி புலம்புகிறார்.
மறுபுறம் பழனிசாமியை பார்க்க வந்த பெண் அதிகமாக படித்திருக்கும் நிலையில் அதனை நினைத்து பழனிசாமி பெருமைப்படுகிறார். மேலும் இவ்வளவு நல்லா படிச்சு இருக்கீங்க என்ன மாதிரி ஆளை ஏன் கல்யாணம் பண்ணிக்கிறீங்க ஏன் இவ்வளவு நாளா கல்யாணம் பண்ணிக்கல என கேட்க இல்லை எனக்கு தோணவில்லை படிப்பு மேல அதிக ஆர்வம் இருந்துச்சு என பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் பெண் பழனிசாமியிடம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க என கேட்க அதற்கு பழனிசாமி உங்களிடம் சொல்லவே கூச்சமா இருக்கு நான் ஸ்கூல் படிப்பையே தாண்டல அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க எனவே பிசினஸ் பார்க்க வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு இப்பொழுதுதான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போறேன் நாலு இங்கிலிஷ் வார்த்தையே கத்துக்கிட்ட அங்குதான் நான் பாக்கியலட்சுமி மேடத்தை பார்த்து நல்ல பிரண்டாகி தற்பொழுது உங்கள பார்ப்பதற்கான நிலைமை வந்திருக்கிறது என கூறி வெக்கப்படுகிறார்.
அந்த பெண் இப்பொழுது கூச்சம் எல்லாம் போயிடுச்சா என கேட்டு கிண்டல் செய்கிறார். பிறகு இனியா அமிர்தாவிடம் பேசதான போனாங்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு என கேட்க அமிர்தா பேசி புரிஞ்சுக்கணும் இல்ல நீ ஏன் அவங்க கல்யாணத்துல இவ்வளவு ஆர்வமா இருக்க என கேட்க அதற்கு இனியா அவங்க நம்பர் ரிலேட்டிவ் ஆயிடுவாங்க புது டிரஸ் எல்லாம் போடலாம் கல்யாணம் கண்டிப்பா ஆயிடும் இல்ல என கேட்கிறார் இந்த நேரத்தில் கோபி பேசாம இனியா கிட்ட போன் பண்ணி கேட்டு விடலாமே என போன் செய்கிறார்.
பொண்ணு பார்க்க வந்தாச்சா என கேட்க அதற்கு வந்துட்டாங்க இப்போது தனியா பேசிக்கிட்டு இருக்காங்க என கூற அதற்கு கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்குற இடத்துல எல்லாம் தனியா தான் பேசிக்கிட்டு இருக்காங்க இப்ப இது வேற என கூற இனியா டாடி என கூப்பிடுகிறார். பிறகு ஃபோனை வைத்துவிட ராதிகா வருகிறார்.
உன்கிட்ட ஒன்னு பேசணும் என கூற அதற்கு ராதிகா உங்க வீட்டு பத்தி மட்டும் பேசாதீங்க செம டென்ஷன் ஆகிவிடுவேன் என சொல்கிறார் அதற்கு கோபி இல்ல கார்ல ஏசி போணுமா இல்ல இன்னும் வைக்கணுமா என்று தான் கேட்க வந்தேன் என சொல்கிறார். பிறகு கோபி மனதிற்குள் நல்ல வேலை சொல்லல சொல்லியிருந்தா காருல இருந்து நம்மள இறக்கி விட்டுட்டு கார நம்ப மேல ஏத்திருப்பா என நினைக்கிறார்.