அப்பாவைப் போலவே 2வது திருமணம் செய்ய ரெடியான செழியன்.! நீ எல்லாம் ஒரு ஆளு என ராதிகாவை வெளுத்தெடுத்த பாக்கியா.. ஈஸ்வரியிடம் மாட்டிக்கிட்டு முழிக்கும் கோபி

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் மயூ தனியாக அமர்ந்திருக்கும் நிலையில் இதனை பார்த்த பாக்கியா வருத்தப்படுகிறார். மேலும் கிச்சனை எட்டி பார்க்க அமிர்தா அழைக்கிறார். மையூ பாக்கியாவிடம் ஏன் ஆன்ட்டி முன்னாடில சிரிச்சு பேசுவீங்க இப்ப எல்லாம் பேசவே மாட்டேங்கிறீங்க என கேட்க பிறகு சாப்டியா என பாக்கியா கேட்கிறார்.

எனவே ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வந்து மயூவுக்கு கொடுக்க ஈஸ்வரி மிரட்டுகிறார் பிறகு பாக்யா தனியாக ஈஸ்வரியை அழைத்துச் சென்று அவ சின்ன பொண்ணு என சொல்ல நீ இப்படி விட்டுக் கொடுத்துதான் உன்னுடைய வாழ்க்கை இந்த நிலைமையில் இருக்கிறது என கூறுகிறார். இதனை அடுத்து ஜெனி பாட்டு கேட்டுக் கொண்டு இருக்க செழியன் வருகிறார்.

அப்பொழுது என்ன இன்னகி சீக்கிரம் வந்துட்ட என ஜெனி கேட்க செழியன் எப்பொழுதும் போல தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார். இதனை அடுத்து அந்த கிளைன்ட் தொல்லை தாங்க முடியவில்லை கண்ட நேரத்துக்கு போன் பண்றாங்க பாக்கணும் என்ற சொல்றாங்க என கூற அதற்கு ஜெனி எனக்கு வேலை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே என கூறுகிறார் செழியன் அதற்கு அந்த கிளைன்ட் பெண் என்பதை ஜெனியிடம் கூறுகிறார்.

அப்ப ஒன்னும் சரி இல்லையே என ஜெனி கூட நான் அப்படியெல்லாம் கிடையாது எனக் கூறிய இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செழியன் கொஞ்ச நாளில் மாறி தனது அப்பாவை போல இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம் மையூ மேக்ஸ் டவுட் என்பதால் ராதிகாவிடம் கூறுகிறார். எனவே கோபியை சொல்லித் தருமாறு கூற பிறகு கோபியும் சொல்லித் தருகிறார் இந்த நேரத்தில் இனியா படிப்பதற்காக வர மையூ படித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு செல்கிறார்.

இதனைப் பற்றி ஈஸ்வரிடம் கூற ஈஸ்வரி இனியாவை அழைத்துக் கொண்டு ராதிகாவும் இருக்கும்ரூம்க்கு வருகிறார். அப்பொழுது இனியா தான் பிளஸ் டூ எனவே அவளுக்கு தான் சொல்லி தர வேண்டும் என சண்டை போட கோபி வேறு வழி இல்லாமல் இனியாவிற்கும் சொல்லித் தருகிறார் எனவே இதனால் கோபத்தில் ராதிகா மயூவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார். கோபி ராதிகா ராதிகா என கூப்பிட அதற்கு ஈஸ்வரி என்ன ராதிகா இனியாவுக்கு ஒழுங்கா சொல்லிக் கொடு என்னை மிரட்டி விட்டு செல்கிறார்.

பிறகு கிச்சனுக்கு சென்ற ராதிகா பாக்யாவிடம் உன்னதான் விவாகரத்து செஞ்சுட்டாருல அப்பனா விட்டுட்டு போக வேண்டியது தானே ஏன் இங்கே இருக்க அவர மனச மாத்தலாம்னு பாக்குறியா என கூற நான் எதாச்சும் சிரிச்சிட போறேன் அவர் என விவாகரத்து கேட்டப்பவே என்னால தர முடியாமல் இருந்திருக்க முடியும் நான் ஆனால் அப்படி பண்ணவில்லை. மேலும் நீங்க பண்றத விட என்னால நிறைய பண்ண முடியும் ஆனால் நீங்கள் பண்றத நான் பண்ண விரும்பவில்லை மேலும் உங்களை நான் மதிக்கவும் இல்லை எனக் கூறி ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார்.