விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் சமீப காலங்களாக ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் அதிரடியான கலவரங்கள் அரங்கேரி உள்ளது.
அதாவது ராதிகா பியூட்டி பார்லர் சென்றுள்ள நிலையில் அங்கு பணிபுரிபவர்கள் உங்களுடைய மகள் எப்படி இருக்கிறார் என கேட்க நன்றாக இருப்பதாக கூறுகிறார். மேலும் திருமண வாழ்க்கை எப்படி போகிறது என கேட்க ஏண்டா திருமணம் செஞ்சோம்னு இருக்கு என சொல்கிறார். இவ்வாறு வாழ்க்கையை வெறுத்தது போல் பல தகவல்களை பகிர அவருடைய பக்கத்தில் பாக்கியா இருப்பது அவருக்கு தெரியவில்லை.
ஆனால் ராதிகா பேசுவதை பாக்யா செல்வி இருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ராதிகா கண்விழித்து பார்க்கும் பொழுது ஜெனி அங்கு இருப்பது தெரிய வருகிறது மேலும் செல்வி பாக்யா இருவருக்கும் ராதிகா தான் இவ்வாறு தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி பேசி உள்ளார் என்பது தெரிய வருகிறது இதனை பார்த்துவிட்டு ராதிகா அதிர்ச்சி அடைய பிறகு வீட்டு வேலையை தவர வேற எந்த வேலையும் செய்ய மாட்டாங்க ஆனா இப்ப பியூட்டி பார்லர் எல்லாம் வந்து மேக்கப் போடுறாங்க என திமிராக யோசிக்கிறார்.
இந்த நேரத்தில் செல்வி பாக்யாவிடம் அக்கா உங்களுடைய தலை மிகவும் அழகாக இருப்பதாக கூறுகிறார். பிறகு பாக்கியா வீட்டிற்கு காரில் சென்று அங்கு மிகவும் மாடர்னாக ஸ்டைலுடன் நிற்கிறார். இவ்வாறு கோபி எப்படி ராதிகாவை வெறுக்கிறாரோ அதேபோல் ராதிகாவும் கோபியை வெறுக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து செல்வி பாக்யா இருவருக்கும் ராதிகாவிற்கு கோபியை பிடிக்கவில்லை என்பது தெரிய வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் போற போக்கை பார்த்தால் இவர்கள் இருவரும் டிவோர்ஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது மேலும் இதற்கு மேல் ஏராளமான திருஷ்டிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.