ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்திய கோபி.! ஆதரவளிக்கும் செழியன்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் ஏராளமான டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது. அதாவது செழியன் மனைவி ஜெனிக்கு இன்று வளைய காப்பு வைப்பதற்காக அவர்களுடைய வீட்டில் இருந்து வருகிறார்கள். வந்தவுடன் ஜெனிக்க மிகவும் அழகாக வளைகாப்பு நடைபெற்று முடிகிறது.

எனவே அனைவரும் மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் திடீரென்று ஒருவர் செழியனின் அப்பா எங்கே என கேட்க அதற்கு ஜெனியின் அம்மா அவர் வெளியூர் சென்றிருக்கிறார் இன்று ஈவினிங் வந்து விடுகிறார் எனக்‌ கூறி சமாளிக்கிறார். இந்த நேரத்தில் ராமமூர்த்தி வர பாக்கியா இனியா எங்கே என கேட்கிறார் அவள் வருவாள் என கூறுகிறார்.

இனியாவும் கோபியிடம் சொல்லிவிட்டு பாக்யா வீட்டிற்கு வர அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்த நேரத்தில் கொஞ்ச நேரம் கழித்து கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வர அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் இதுதான் செழியனின் அப்பா என்றால் அவருடன் இருப்பது யார் என கேட்கிறார்.

அதற்கு அனைவரும் தயங்க கோபி இவங்க ராதிகா என்னுடைய மனைவி எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே ராமமூர்த்தி உன்னை யாரு இங்க வர சொன்னது என கேட்க நான் பாக்யாவை தான் விவாகரத்து செய்து இருக்கிறேன் என்னுடைய பிள்ளைகளை கிடையாது என கூற பிறகு செழியனிடம் வளைகாப்பு நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சா என கேட்கிறார்.

அதற்கு செழியன் முடிந்து விட்டது எனக் கூற பிறகு ஜெனியை அமர வைத்து கோபி ராதிகா இருவரும் நலுங்கு வைக்கிறார்கள். பிறகு நல்லபடியாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்துக்களையும் கூற செழியன் இதனை ஏற்றுக் கொண்டாலும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் செம கடுப்பில் இருக்கிறவர்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.