இனியாவிற்காக பாக்யா எடுத்த முடிவு.! எழிலை சந்தித்து அட்வைஸ் கூறும் கோபி..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த சீரியலை கண்டு களித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமைத்த உணவை ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு எடுத்து வருகிறார் அங்கு அனைவரும் சாப்பிட கோபி மிகவும் அருமையாக இருப்பதாக கூறுகிறார். பிறகு இது பாக்யா சமைத்தது என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் எனவே இதனால் கடுப்பான ராதிகாவை சந்தித்து கோபி அந்த சாப்பாடு வாயிலேயே வைக்க முடியல நல்லா இல்ல எனக் கூறி சமாதானப்படுத்துகிறார் ஒரு வழியாக ராதிகாவும் சிரித்து விடுகிறார்.

இதனை அடுத்து கோபி எழிலை எதார்த்தமாக பார்க்க பிறகு அட்வைஸ் கூறுகிறார். அதாவது எழில் தற்பொழுது வேலையை விட்டுள்ள நிலையில் அனைவரும் எழிலை திட்டுகின்றனர். எனவே கோபியும் ஃபியூச்சர் நல்லா இருக்க வேண்டும் எனவே அந்த வேலையை ஏன் விட்ட அதற்காக எவ்வளவு முயற்சி எடுத்த எனவே அதனை பாதியிலேயே விடாத எனக்கூறி பேசிக் கொண்டிருக்க அதனை எழில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனை அடுத்து பாக்யா இனியா சரியாக படிக்கவில்லை மார்க் மிகவும் குறைவாக எடுத்து இருப்பதால் நல்ல டியூஷன்னாக தேடி அதற்கு பணமும் கட்டி உள்ளார். இது தெரியாத கோபி ராமமூர்த்தியிடம் படத்தைக் கொடுத்து இனியாவை டியூஷனில் சேர்க்குமாறு கூற அதற்கு ராமமூர்த்தி பாக்கியா இனியாவிற்காக பணததைக் கட்டி டியூஷனில் சேர்த்து விட்டதை கூற பிறகு ராதிகா கோபி இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

இவ்வாறு தற்பொழுது எழிலுக்கு அமிர்தவுடன் திருமணம் நடக்குமா இல்லை வர்ஷினிவுடன் திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது ஏனென்றால் ஈஸ்வரி எழிலிடம் தான் சொல்லும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கியுள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.