சந்தி சிரிக்கும் பாக்யாவின் குடும்பம்.! தெனாவெட்டின் உச்சத்தில் கோபி.. பரபரப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்

0
baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாக்யாவின் குடும்பம் நடுரோட்டிற்கு வரப்போகிறது.

அதாவது கோபி வீட்டை விற்க முடிவு செய்திருக்கும் நிலையில் எழில் எப்படியாவது இந்த வீட்டை வாங்கி விடுவேன் என சவால் விட்டு இருக்கிறான் இதனால் கோபி எழிலின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார் இந்நிலையில் எப்படியாவது வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக ராமமூர்த்தி தன்னுடைய பூர்வீக இடத்தை விற்று பணத்தை தயார் செய்யலாம் என பாக்யாவை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு அட்வான்ஸ் வாங்க போகும் நேரத்தில் கோபி போன் செய்து அது எங்களுடைய பூர்விகா சொத்து அப்பா என்னுடைய சம்மதம் இல்லாமல் அந்த இடத்தை விற்க முடிவு செய்துள்ளார் எனவே மேலும் நீங்கள் அந்த இடத்தை வாங்கினால் கோர்ட்டில் கேஸ் போடுவேன் என கூறியதால் வாங்க வந்தவர் எனக்கு இடம் வேண்டாம் என கூறிவிட்டு சென்றுள்ளார் எனவே வேறு வழியில்லாமல் ராமமூர்த்தி பாக்கியவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டார்.

இவர்கள் வந்தவுடன் ஈஸ்வரி எல்லாம் இவனால் தான் என எழிலின் மீது கோபத்தை காட்டுகிறார். இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட ராமமூர்த்தி எல்லாம் அந்த கோபியால் தான் என கூறிவிட்டு கோபியிடம் சண்டை போடுவதற்காக செல்கிறார் அங்கு போய் இது எல்லாம் நீ செய்வது நியாயமா உன்னால் குடும்பமே சுக்கு நூறாக உடைய இருக்கிறது என கூறிவிட்டு நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என சாபம் விடுகிறார்.

கோபி இதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் சவால் விட்டானே எழில் அவனை போய் கேளுங்க என கூறி விடுகிறான். இப்படிப்பட்ட நிலையில் வேறு வழியில்லாமல் எழிலும் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள போகிறார் எப்படியாவது எழிலின் மனதை மாற்ற வேண்டும் என செழியன் ஈஸ்வரி இருவரும் கிடைக்கும் நேரங்களில் எழிலை திட்டி வருகின்றனர். இதனால் பாக்கியலட்சுமி குடும்பமே சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது.