பூர்வீக நிலத்தை விற்பதற்கு முட்டுக்கட்டை போட்ட கோபி.! நான் உனக்கு பாட்டியும் இல்லை நீ எனக்கு பேரனும் இல்லை என எழிலை வச்சு செய்யும் ஈஸ்வரி..

0
baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் தற்பொழுது கோபி தன்னுடைய வீட்டை விற்க முடிவு செய்துள்ள நிலையில் எப்படியாவது அந்த வீட்டை வாங்க வேண்டும் என பாக்யா, எழில் இருவரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ராமமூர்த்தி பாக்யாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார் அங்கு ஊர் பெரியவர் ஒருவரிடம் பூர்வீக சொத்தை விற்கப்போவதாகவும் அதற்காக யாராவது நிலத்தை வாங்க இருந்தால் அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். அவரும் இடம் வாங்க இருக்கும் ஒருவரை அழைத்து வர அந்த நேரத்தில் இதனை இனியாவின் மூலம் தெரிந்து கொண்ட கோபி அந்த பெரியவருக்கு போன் செய்து அது எங்களுடைய பூர்வீக நிலம் அதனை விற்க முடியாது அப்பா எனக்கு தெரியாம அந்த நிலத்தை விற்க முடிவு செய்து இருக்கிறார்.

அப்படி  நிலத்தை விற்றால் நான் கேஸ் போடுவேன் என கூற நிலம் வாங்க வந்தவர் வேண்டாம் என கூறி விடுகிறார். அந்தப் பெரிய வரும் ராமமூர்த்தியை சந்தித்து கோபிக்கு தெரியாமல் ஏன் நிலத்தை விற்குரிங்க என கூறுகிறார் இதனால் ராமமூர்த்தி பாக்யா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனை அடுத்து மறுபுறம் ஈஸ்வரியின் பக்கத்தில் எழில் வந்து அமர கையை எடுத்துவிட்டு நான் உனக்கு பாட்டியும் இல்லை நீ எனக்கு பேரனும் இல்லை என கூறுகிறார்.

உன்னால்தான் இவ்வளவு பிரச்சனையும் நீ நினைத்தால் இந்த அனைத்து பிரச்சனைகளைளும் சரி செய்ய முடியும் எனவே வர்ஷினியை திருமணம் செய்து கொள் என பிளாக் மெயில் செய்கின்றனர். இதனை அடுத்து மேலும் தொடர்ந்து எழிலை ஈஸ்வரி செழியன் இருவரும் திட்ட அதற்கு ஜெனி எழில் என்ன தப்பு செய்தார் எதற்காக திட்டுறீங்க என கேட்க நீ வாயை மூடு என செழியன் கூறுகிறார்.

இவ்வாறு பணம் தயார் செய்வதற்கு வேறு வழி இல்லாமல் எழிலும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள இருக்கிறார் விரைவில் எழில் வர்ஷினியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.