எழிலை திருமணம் செய்து கொள்வதற்காக செழியன் மற்றும் ஈஸ்வரிவுடன் பிளான் போடும் வர்ஷினி.! குழப்பத்தில் ஜெனி..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி பாக்யா இருக்கும் வீட்டை விற்க முடிவெடுத்துள்ள நிலையில் எப்படியாவது அந்த வீட்டை வாங்க வேண்டும் என பாக்யா எழில் இருவரும் பணத்தை புரட்டுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் ராமமூர்த்தி கிராமத்தில் இருக்கும் பூர்வீக சொத்தை விற்பதற்காக பாக்யாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். மறுபுறம் எழில் தன்னுடைய பட கதையை விற்றாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் வர்ஷினி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார்.

ஜெனி பார்த்துவிட்டு வர சொல்ல பிறகு ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் இதனை அடுத்து வர்ஷினி பாட்டி எங்கே என கேட்க ஈஸ்வரியும் வருகிறார் பிறகு ஜெனியிடம் செழியனை அழைத்து வருமாறு ஈஸ்வரி கூறுகிறார். ஜெனி இவ எதற்கு அடிக்கடி இங்கு வாரா என்று தெரியவில்லை மேலும் இவர்கள் அடிக்கடி தனியா பேசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டே செழியனை அழைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் பேச வேண்டும் என்பதற்காக ஜெனியை மேலே அனுப்புகின்றனர் உடனே ஜெனி சென்றவுடன் வர்ஷினி ஈஸ்வரி மற்றும் செழியனிடம் ஆன்ட்டி எழில் இருவரும் இங்கே என கேட்கிறார். அப்பொழுது பணம் புரட்டுவதற்காக வெளியில் சென்று இருப்பதை கூறுகிறார் உடனே வர்ஷினி நான் அப்பாவை பணம் தர சொல்கிறேன் எழில் என்னை திருமணம் செய்து கொள்வாரா என கேட்க ஈஸ்வரி பணத்துக்காகவா உன்னை எழிலுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறோம் என கேட்கிறார்.

மேலும் என்ன ஆனாலும் அமிர்தாவிற்கு மட்டும் எழிலை திருமணம் செய்து வைக்க முடியாது என உறுதியாக கூறுகிறார். பிறகு வர்ஷினி நான் பிசினஸ் பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க எழில் குடும்பத்திற்காக என்ன வேணாலும் செய்வார் எனவே நான் அந்த பணத்தை தருகிறேன் நமக்கு வீடும் கிடைத்துவிடும் எழில் படமும் எடுக்கலாம் எனவே எப்படியாவது இந்த வீட்டிற்கு நான் மருமகளாக வரவேண்டும் ப்ளீஸ் பாட்டி என ஈஸ்வரிடம் கெஞ்சுகிறார் எனவே இதற்கு மேல் என்ன ட்விஸ்ட் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.