பணத்திற்காக ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு.! பாக்கியாவிற்கு வீட்டை எழுதி தர முடியாது என பிடிவாதமாக இருக்கும் கோபி..

0
baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்த அடுத்தடுத்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது கோபி பாக்கியாவின் மீது இருக்கும் கோபத்தில் வீட்டை விற்கப் போவதாக கூறியிருக்கிறார் எனவே எப்படியாவது இந்த வீட்டை விற்க விடக்கூடாது என பாக்யா எழில் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

மேலும் இதில் தன்னுடைய பட கதையை விற்று பணத்தை தயார் செய்து விடலாம் என முடிவெடுக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா வீட்டின் முன் நின்று எழிலை பார்த்து பேச காத்திருக்கிறார் மேலும் இதனை பார்த்து விட்டு எழில் வர பிறகு இருவரும் பேசிக் கொண்டிருப்பதை ராமமூர்த்தி கேட்கிறார் இதனை எடுத்து காலையில் எழுந்தவுடன் ராமமூர்த்தி வீட்டிற்கு வந்து பாக்யாவை சொந்த ஊருக்கு அழைக்கிறார்.

மேலும் அங்கிருக்கும் சொத்துக்களை விற்கலாம் என கூற ஈஸ்வரி முடியாது என கூறுகிறார் ஆனால் ராமமூர்த்தி பிடிவாதமாக இருக்க பிறகு பாக்யா ராமமூர்த்தி உடன் கிராமத்திற்கு செல்கிறார் இதனை அடுத்து இனியாவிடம் ஈஸ்வரி கோபியை அழைத்து வருமாறு கூற பிறகு கோபி இனியா இருவரும் ஈஸ்வரியை பார்ப்பதற்காக வருகின்றனர்.

அங்கு நீ பண்றது எல்லாம் நியாயமா எனக் கேட்க உடனே கோபி உங்களையும் அப்பாவையும் நான் பார்த்துக்கிறேன் ஜெனி செழியன் இருவரும் சொந்த வீடு வாங்க போறாங்க எழில் பாக்யா எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை நான் உங்க பேரில் கூட வீடை எழுதி தருவேன் ஆனால் ஒரு காலத்திலும் பாக்யா பெயரில் வீடு எழுதி தர மாட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இதனை அடுத்து எழில் ஒவ்வொரு ஆபீசர்க்கும் சென்று தன்னுடைய பட கதையை கூற சிலர் இந்த கதை பிடிக்கவில்லை என்றும் இன்னும் சிலர் இன்னும் ஆறு மாதம் காலம் கழித்து வரவேண்டும் எனவும் கூறுகிறார்கள் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.