விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக பல ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோபி பணத்திற்காக சிங்கியடிக்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ராதிகா மாதத்திற்கு ஒரு முறை பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என கூறிய நிலையில் கோபியும் சரியென சொல்கிறார்.
இதனை அடுத்து மற்றொரு புறம் ஜெனி செல்வி இருவரும் பாக்யாவை அழைத்துக் கொண்டு பியூட்டி பார்லருக்கு சொல்கிறார்கள். அங்கு ராதிகாவும் வர பிறகு ராதிகா பாக்யாவை பார்க்காமல் ஏண்டா திருமணம் செஞ்சோம்னு இருக்கு இப்ப எல்லாம் பியூட்டி பார்லர் வரக்கூட நேரமில்லை எனக்கூறி வருத்தப்படுகிறார் இதனை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு வீடு திரும்பியவுடன் பாக்யா வெளியில் நின்று அத்தை என்ன சொல்லுவாங்கன்னு தெரியல என்ன பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி வருகிறார் உடனே பாக்யா தன்னுடைய முடியை சுருட்டி கொண்டை போடுகிறார். ஈஸ்வரி எதற்காக நீங்க அவங்க என்கிட்ட இருக்கீங்க என கேட்க பிறகு பாக்கியா தன்னுடைய ரூமிற்கு செல்கிறார்.
அங்கு கண்ணாடி முன் அமர்ந்து தன்னுடைய முடியை முன்னாடி எடுத்து போட்டு அழகை ரசிக்கிறார் இந்த நேரத்தில் ஜெனி வர ஜெனியிடம் இதுவரையிலும் கண்ணாடியில் உட்கார்ந்து என்னுடைய முகத்தை பார்த்தது இல்லை எனக் கூற அதற்கு ஜெனி எல்லாரையும் நாம பார்க்கிறோம் நம்மளையும் கொஞ்ச நேரம் பார்த்தால் தப்பு இல்லை என கூறிக் கொண்டிருக்க எழிலிடம் இதனை பற்றி கூறுகிறார்.
எழிலும் அழகாய் இருப்பதாக கூறி பாராட்ட இதனை அடுத்து கோபியின் அக்கவுண்டில் இருந்து 17 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வர உடனே கோபி என்னுடைய பணம் காணாமல் போய்விட்டது என பதட்டம் அடைகிறார். எனவே ராதிகா வீதம் என்னுடைய அக்கவுண்டில் இருந்த 17 ஆயிரம் காணவில்லை என கூற அதற்கு ராதிகா பதட்டப்படாதீங்க நான்தான் அந்த பணத்தை எடுத்தேன் பியூட்டி பார்லருக்காக செலவு செய்தேன் என்னது ஒரு மாதத்திற்கு பியூட்டி பார்லருக்கு மட்டும் 17 ஆயிரமா என அதிர்ச்சடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.