டிவோர்ஸ் ஆனவ எவனாச்சும் இருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே உனக்கு என் பேர தான் கிடைச்சானா என அமிர்தாவை அசிங்கப்படுத்தியா ஈஸ்வரி.! அதிர்ச்சியில் பாக்யா..

0
baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது எழில் திருமணத்தை வைத்து எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் பார்க்கப்பட்டு வருகிறது.

அதாவது எழில் தன்னுடைய குடும்பத்தினர்களின் சந்தோஷத்திற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட நிலையில் பாக்யா தன்னுடைய மகனுக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை பண்ணி வைக்க கூடாது என்பதற்காக அமிர்தாவை மண்டபத்திற்கு அழைத்து வருகிறார்.

மேலும் வர்ஷினி, எழில் திருமணத்தை நிறுத்திய நிலையில் அனைவரும் பாக்கியாவை சண்டை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் உன்னுடைய மகன் வாழ்க்கையில் மண்ணை தூக்கி போட்டுட்ட இதற்கு மேல் இந்த கல்யாணம் நடக்காது அவனுடைய எதிர்காலத்தை யோசிச்சு பார் என திட்டுகிறார்.

மேலும் ராமமூர்த்தியும் ஏன் பாக்கியா இப்படி செஞ்ச அதோடு மட்டுமல்லாமல் இந்த பொண்ணு வேற அழைச்சிட்டு வந்திருக்க என்ன செய்வது என கேட்க அதற்கு பாக்கியா எழிலுக்கு இந்த பொண்ண தான் புடிச்சிருக்கு அதனால அமிர்தாவதான கல்யாணம் செஞ்சு வைக்கணும் மாமா எனக் கூற அது மட்டும் முடியவே முடியாது நான் உயிரோட இருக்கிற வரை வரையும் இந்த திருமணம் நடக்காது  என ஈஸ்வரி கூறுகிறார்.

மேலும் அமிர்தாவிடம் பொண்டாட்டி செத்தவன், டிவோர்ஸ் ஆனவன் எத்தனை பேர் இருக்காங்க அவங்களாம் உனக்கு கிடைக்கலையா என்னுடைய பேரன் தான் உனக்கு கிடைச்சானா எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் எழில் அமைதியாக இருந்து வருகிறார் அமிர்தா என்ன செய்வது என்று தெரியாமல் தலை குனிந்து அழுகிறார். பிறகு ஒரு கட்டத்தில் எழில் எல்லாத்தையும் நிறுத்துக என கத்த இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.