மணமேடையிலிருந்து அசிங்கப்படுத்தி ராதிகாவை கீழே இறங்க வைத்த ஈஸ்வரி.! கணவன் மனைவியாக அமர்ந்த கோபி-பாக்கியா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து பல ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது எழில் மற்றும் வர்ஷினிக்கு மிகவும் பிரமாண்டமான நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதாவது கோபி வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் எப்படியாவது இதனை வாங்க வேண்டும் என எழில் பாக்கியா இருவரும் போராடி வந்தார்கள்.

ஆனால் இவர்களால் இது முடியாமல் போக பிறகு வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள எழில் ஒப்புக்கொள்கிறார் அதாவது வர்ஷினி அப்பா வீடு வாங்குவதற்கு தேவையான பணத்தை தர முடிவு எடுத்துள்ள நிலையில் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ஈஸ்வரி கூறி எழிலின் காலில் விழுந்து விடுகிறார்.

வேறு வழியில்லாமல் எழிலும் இதற்கு ஒப்புக்கொள்கிறார் இந்நிலையில் இன்று எபிசோடில் எழில், வர்ஷினி இருவருக்கும் மிகவும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிகிறது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு கோபி ராதிகா இருவரும் வந்துள்ள நிலையில் மண மேடையில் பாக்கியாவின் பக்கத்தில் கோபியை அமர வர்ஷினி அப்பா கூறுகிறார்.

எனவே ஈஸ்வரியும் ராதிகாவை நீ கொஞ்சம் தள்ளிப்போமா எனக் கூற உடனே கோபப்பட்டு ராதிகா மணமேடையிலிருந்து கீழே இறங்கி விடுகிறார். கோபி பாக்கியாவின் பக்கத்தில் அமர்ந்து இருவரும் எழிலின் அம்மா, அப்பாவாக கலந்து கொள்கின்றனர் கோபி ராதிகாவை நினைத்து பயப்பட ராதிகா முறைத்துக் கொண்டே இருக்கிறார். இதனை அடுத்து திடீரென அமிர்தா மண்டபத்திற்கு வர எழில் வர்ஷினிக்கு நடந்த நிச்சயதார்த்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு அமிர்தாவை பார்த்த ஈஸ்வரி உடனே கீழே வந்து அவரை தர தர என அழைத்துக் கொண்டு வெளியில் அனுப்பி வைக்கிறார் கண்டபடி திட்ட எழில் அமிர்தாவை அழைத்து சென்றதை பார்த்து வருத்தம் அடைகிறார் இவ்வாறு வர்ஷினிக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.