விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக்கி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பியின் உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
அதாவது கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவு செய்த நிலையில் பணம் தருவதற்காக கெடு வைத்திருந்தார். ஆனால் பாக்கியவால் பணம் தர முடியாமல் போன நிலையில் ராமமூர்த்தி கோபிக்காக தன்னுடைய பூர்வீக சொத்துக்களை எழுதி தருவதாக கூறினார். எனவே கோபியும் அதனை எடுத்துக் கொண்டு மீதம் 20 லட்சம் தர வேண்டும் என கூறியிருந்த நிலையில் பாக்யா தொடர்ந்து ஒரு வாரம் கேட்டரிங் தொழில் செய்தால் அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கிடைத்தது.
இதன் மூலம் கோபியிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து மீதி பணத்தை இன்னும் ஆறு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் மேலும் ராதிகா கம்பெனியில் பாக்கியாவிற்கு கேட்டரிங் செய்வதற்கான ஆர்டர் ஏற்கனவே கிடைத்த நிலையில் அதனை ராதிகா தான் தரவிடாமல் செய்தார். ஆனால் பிறகு மீண்டும் தற்பொழுது பாக்கியாவிற்கு அந்த கம்பெனிலையே ஆர்டர் கிடைத்திருக்கிறது.
எனவே அந்த ஆபீசர் உங்களால் தான் முன்னாடி பாக்கியாவை வேண்டாம் என கூறினோம் என சண்டை போடுகிறார். இதனால் ராதிகா அடுத்த நாள் சீக்கிரமாக கம்பெனிக்கு போக வேண்டும் என கோபியிடம் கூற இவ்வாறு ஆபீசர் தன்னை திட்டியதைப் பற்றி கூறுகிறார். அதற்கு கோபி பாக்யா கிழிச்சிடுவா என வைத்தெரிச்சலில் பேச இதனை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ராதிகாவும் ஆபீஸ்க்கு வந்து பாக்யாவை இன்டர்வியூ விடுக்க அப்பொழுது பாக்யாவுக்கு இங்கிலீஷ் தெரியாத காரணத்தினால் ராதிகா இது கூடவா உங்களுக்கு தெரியாது என அசிங்கப்படுத்த உடனே பாக்கியா எல்லாம் பிறக்கும் பொழுதே தெரிஞ்சுகிட்டு பிறக்கிறது இல்ல அதற்கான தேவை வரும் பொழுது தானாகவே தெரிஞ்சுக்கலாம் நானும் அப்படி இனிமேல் இங்கிலீஷ் பேச கத்துகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.