விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக பாக்யா தன்னுடைய கேட்டரியில் மிகவும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார் மேலும் ஒரு வாரம் தொடர்ந்து கேட்டரிங் தொழிலை செய்த நிலையில் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.
எனவே இந்த பணத்தை கோபியிடம் கொடுக்க எட்டு நாட்களில் எப்படி இரண்டு லட்சம் தர முடிந்தது என ஆச்சரியப்படுகிறார். இதனை ராதிகாவிடம் கூற அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் கோபி எப்படியாவது பாக்கியா சீக்கிரம் பணத்தை கொடுத்து விடுவாளோ என நினைத்து பயப்படுகிறார் ஏனென்றால் பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதே கோபி நோக்கமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பாக்கியாவிற்கு ராதிகாவின் ஆபிஸில் கேட்டரிங் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை ராதிகா தன்னுடைய மேனேஜரிடம் பேசி தரவிடாமல் செய்தார். ஆனால் தற்பொழுது மீண்டும் கேட்டரிங் செய்வதற்காக ஆள் தேவையான நியூஸ் பேப்பரில் பார்த்துவிட்டு ஆபீசுக்கு செல்கிறார் பாக்கியா.
அங்கு ஆபீஸரும் பாக்யாவிற்கு கேட்டரிங் ஆர்டரை தருகிறார் ஆனால் ராதிகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனவே ராதிகா பாக்கியாவிடம் தொடர்ந்து இங்கிலீஷில் பேச பாக்யா இங்கிலீஷ் தெரியாமல் கஷ்டப்படுகிறார். எனவே ராதிகா ஒரு இங்கிலீஷ் கூட தெரியலைனா எப்படி பாக்கியா என கேட்க அதற்கு பாக்கியா எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே பிறக்கிறது இல்லை.
அதற்கான தேவை வரும்போது தான் தெரிந்து கொள்கிறோம் நானும் தெரிந்து கொள்கிறேன் எனக்கூறி ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார். இதனால் பல்பு வாங்கிய ராதிகா என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து போகிறார். இவ்வாறு பாக்யா ராதிகாவின் ஆபீஸில் கேட்டரிங் செய்வதற்கான வாய்ப்பைை பெற்றுள்ள நிலையில் இதற்கு மேல் ராதிகா பல இடங்களில் பாக்கியாவை அசிங்கப்படுத்த நினைப்பார்.